![chi](http://image.nakkheeran.in/cdn/farfuture/GscW5h-RqYDeNgdXTq_T03b8yKjQtHIjKO6Mm6n91Yc/1533347644/sites/default/files/inline-images/chidambaram-raid-759.jpg)
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் திருட்டு போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்கம், வைர நகைகள் மற்றும் ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வீட்டின் மேலாளர் ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.