பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி திட்டமிட்டுள்ளதாக சந்தேகம் இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு மகாராஷ்ட்ர போலீஸ் தகவல் அளித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் மகராஸ்டராவில் தலித் மாநாடு நடந்தது அதைத்தொடர்ந்து வன்முறை நிகழந்தது. இந்த வன்முறை தொடர்பாக போலீஸ் விசாரணையில் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருக்கலாம் என பலரை தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.
இதில் மாவோயிஸ்டுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படும் ரோனா ஜேக்கப் என்பவரை மகாராஷ்டிர மாநில போலீசார் கைது செய்தனர். கைது செய்த ரேனா ஜேக்கப்பிடமிருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல இருப்பதாகவும், மக்களுடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மோடிக்கு குறி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், ராஜீவ் காந்தி போன்ற நிகழ்வு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இந்த கடித விவகாரம் குறித்து மகாராஷ்டிரா போலீஸ் உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது.