நடந்துமுடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் வென்ற 13 திமுக எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகர் தன்பால் பதவி பிரமாணம் செய்துவைக்க, தற்போது பதவியேற்றுக்கொண்டனர்.
![dmk mlas](http://image.nakkheeran.in/cdn/farfuture/3OAHK8ud_LxZofWzbw3vjTfX1LPRH9W3_zqSxLjeFO0/1559023053/sites/default/files/inline-images/dmk-mlas.jpg)
இந்த நிகழ்வில் திமுக தலைவர் முன்னிலை வகித்தார். உடன் டி.ஆர். பாலு, பொன்முடி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இதன்மூலம் சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் பலம் 98லிருந்து 101 ஆக உயர்ந்தது.
பதவியேற்றுக்கொண்ட எம்.எல்.ஏ.க்கள்
பூந்தமல்லி - ஆ.கிருஷ்ணசாமி
பெரம்பூர் - ஆர்.டி.சேகர்
திருப்போரூர் -எஸ்.ஆர். இதயவர்மன்
குடியாத்தம் (தனி) - எஸ். காத்தவராயன்
ஆம்பூர் - அ.செ. வில்வநாதன்
ஓசூர் - எஸ்.ஏ. சத்யா
திருவாரூர் - பூண்டி. கே. கலைவாணன்
தஞ்சாவூர் - டி.கே.ஜி. நீலமேகம்
ஆண்டிப்பட்டி - எ. லோகிராஜன்
பெரியகுளம் (தனி) - கே.எஸ். சரவணகுமார்
அரவக்குறிச்சி - வி. செந்தில்பாலாஜி
திருப்பரங்குன்றம் - பி. சரவணன்
ஓட்டப்பிடாரம் (தனி) - எம்.சி. சண்முகையா