Skip to main content

மோடிக்கு வரிசையாக சேலஞ்ச் கொடுக்கும் காங்கிரஸ் கட்சியினர்!

Published on 24/05/2018 | Edited on 24/05/2018

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தனது ட்விட்டர் பக்கத்தில் உடல்திறன் மேம்பாடு குறித்த சேலஞ்ச் ஒன்றை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, தான் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பதிவிட்டு அதில் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா, கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை டேக் செய்திருந்தார். 
 

Modi

 

 

 

இதற்கு உடனடியாக பதிலளித்த பிரதமர் மோடி, சேலஞ்சை ஏற்றுக்கொள்கிறேன். கூடியவிரைவில் என் பிட்னஸ் வீடியோவை வெளியிடுகிறேன் என தெரிவித்திருந்தார். நாடு பிரச்சனைகளால் கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது பிட்னஸ் சேலஞ்ச்சுக்கு நேரம் செலுத்தும் பிரதமர் மோடி, எனது சேலஞ்சை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறாரா என ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வியெழுப்பி இருந்தார். 
 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பல்வேறு சேலஞ்ச்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரந்தீப் சிங் சர்ஜிவாலா, சாமான்யர்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்த பெட்ரோல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவாருங்கள். இளைஞர்களின் வேலைவாய்ப்பை வலுப்படுத்த தாங்கள் சொன்னதுபோல் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தாருங்கள். என் சேலஞ்சை ஏற்றுக்கொள்ளத் தயாரா? என கேட்டுள்ளார். 

 

 

அதேபோல், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ஜா, தனது கல்லூரி படிப்பிற்கான சான்றிதழ்களைப் பதிவிட்டு, அதேபோல் உங்களாலும் பதிவிட முடியுமா? உங்களது பதிலுக்காக நிறைய ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். சஞ்சய் ஜாவைப் போலவே பலரும் தங்கள் கல்லூரி படிப்பிற்கான சான்றிதழ்களைப் பதிவிட்டு மோடிக்கு சவால் விட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்