Skip to main content

பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு! - அதிமுக புறக்கணிப்பு?

Published on 20/07/2018 | Edited on 20/07/2018


பாஜக அரசு மீது தெலுங்குதேசம் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் கொண்டுவரவில்லை. ஆந்திர பிரச்சனைக்காகவே தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது. நாம் தமிழ் நாட்டின் பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் 22 நாட்கள் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு வேண்டும் என அவை நடக்க முடியாத அளவிற்கு குரல் கொடுத்துக்கொண்டிருந்தோம்.

 

 

அப்போது யார் நமக்கு குரல் கொடுத்தார்கள்? யார் முன்வந்தார்கள்? நம் பிரச்சனையை தீர்க்க எந்த மாநிலமும் முன்வரவில்லை. அப்படியிருக்கும் போது, நாம் ஏன் அவர்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார். இதன் மூலம் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என்பது தெரியவந்தது.

எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக, பாஜக அரசுக்கு எதிராக வாக்களிக்காவிட்டாலும், ஆதரவாக வாக்களிக்குமா என கேள்வி எழும்பியது. இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை அதிமுக புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சி, பினாமி ஆட்சி என அதிமுக அரசு மீது தமிழக மக்களுக்கு பெரும் அதிருப்தி நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தால் மக்கள் மத்தியில் மேலும் அதிருப்தி நிலை உருவாகும் என்பதால் அதனை அதிமுக புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 

சார்ந்த செய்திகள்