Skip to main content

கரோனா தொற்று ஏற்படும் என்ற பயம் உங்களுக்கு இல்லையா..? - விஜயபாஸ்கர் பதில்!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020


கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 
 

்ி



இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனை குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.  இதுவரை தமிழகத்தில் 67 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புக்கள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

உலக நாடுகளில் பல்வேறு தலைவர்களுக்கு இந்த கரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்றொரு நாட்டில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு அந்த அச்ச உணர்வு வரவில்லையா?

அச்சம் ஏற்பட்டாலும் நான் வீட்டில் முடங்க முடியாது, எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. நான் ஏன் இரவு  ஒரு மணிக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு செல்கிறேன், ஒரு துறையின் தலைமை பொறுப்பில் இருக்கின்ற போது நான் சென்றால்தான் அங்கு இருக்கும் மருத்துவர்களுக்கு உத்வேகம் கொடுக்கும். வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொடுக்கும். அதனால் இதற்காக பயந்துகொண்டு வேலை செய்யாமல் முடங்க முடியாது. எதையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு சரியான முறையில் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றதே? 

சரியான கேள்வி, தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நமக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வோம். அது தற்போது தடைபட்டுள்ளது. இருந்தாலும், தற்போதைய நிலையில் அனைத்தும் சரியான நிலையில் இருந்துகொண்டு இருக்கின்றது. போதுமான உபகரணங்கள் நம்மிடம் இருக்கின்றது. பாதுகாப்பு அனைவருக்கும் உறுதி செய்யப்படுகின்றது. நேற்று கூட ஓமந்தூரார் மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட தனி மருத்துவமனையை முதல்வர் ஆய்வு செய்து பாராட்டினார். சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த 21 நாட்கள் என்பது ஹாலிடே கிடையாது, அரசாங்கத்தின் உத்தரவு, கட்டளை என்பதை கருதி பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் நாம் அடுத்த நிலைக்கு செல்லாமல் நம்மை காக்க முடியும். 

 

Next Story

இரண்டாவது கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்...!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

Minister Vijayabaskar gets second vaccination ...!

 

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரண்டாவது கரோனா தடுப்பூசியை (கோவாக்சின்) போட்டுக்கொண்டார். பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்கனவே முதல் தடுப்பூசியை சுகாதர துறை அமைச்சர் சென்னையில் போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.

 

அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் என மொத்தமாக 14,436 பேருக்கு திருச்சி மாவட்டத்தில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை - 13,322. இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் - 1,114. சில மாநிலங்களில் கரோனா எண்ணிக்கை சற்று உயர்ந்திருக்கிறது; ஆனால் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒருநாளுக்கு 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்படுகிறது.

 

Next Story

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

covid vaccine tamilnadu health minister

 

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியை ஜனவரி 16- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாநிலங்களில் கரோனா தடுப்பூசிப் போடும் பணியை அந்தந்த மாநில முதல்வர்கள் தொடங்கி வைத்தனர்.

 

நாடு முழுவதும் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் (கோவிஷீல்டு, கோவாக்சின்) செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், மருத்துவருமான சி.விஜயபாஸ்கர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ‘கோவாக்சின்’ என்ற கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

 

கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டி வரும் நிலையில், அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் தடுப்பூசியை அமைச்சர் போட்டுக்கொண்டுள்ளார்.