Skip to main content

தூத்துக்குடியில் தமிழிசை எடுத்துள்ள புதிய ஆயுதம்!

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியானது தமிழகமே உற்று நோக்கும் ஒரு  சிறப்புமிக்க தொகுதியாக அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது. 

 

tamilisai's new strategy for loksabha election

 

இங்கு பிஜேபி, திமுக, அமமுக மற்றும் சுயேட்சைகள் உட்பட 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் கட்சிகளுக்கிடையே பலமுனை போட்டியாக இருந்தாலும் தற்போதைய நிலவரப்படி தூத்துக்குடி தொகுதி இருமுனை போட்டியாக உள்ளது.
 

திமுக வேட்பாளர் கனிமொழி தனது முதற்கட்ட பிரச்சாரங்களை கிராமப்புறங்களில், பல்வேறு செயல்திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அமமுக வேட்பாளர் புவனேஸ்வரனின் பிரச்சாரமானது தினகரனின் மீதான செல்வாக்கு, அமமுகவின் கட்சி பிரமுகர்களின் மூலமாகவே தனக்கான வாக்கு என தனியொரு பாணியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
 

நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் பெரிய அளவில் இன்னும் தேர்தல் களத்தை அணுகவில்லை. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க பிஜேபி கட்சி வேட்பாளர் தமிழிசை முதற்கட்டமாக அதிமுக கட்சி மாவட்ட பொறுப்பாளர்களை ஒருங்கிணைப்பு, சமாதானம்  செய்யும் பணிகளையே செய்து வருகிறார்.
 

காரணம் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ் விசுவாசி சண்முகநாதன் மாவட்ட செயலாளராக உள்ள நிலையில் செல்லப்பாண்டியன், கடம்பூர் ராஜூ போன்ற கட்சி பிரமுகர்கள் தனக்கானவாக்குகளை பெற முயற்சிப்பார்களா என்கிற சந்தேகம் தமிழிசை மத்தியில் எழ தொடங்கி உள்ளது.
 

தூத்துக்குடியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என கூட்டணியில் உள்ள கட்சிகளில் செல்வாக்கு குறைந்து உள்ள சூழலில், கடந்த 2014ல் தூத்துக்குடியில் அதிமுக  பெற்ற 3,66,056 வாக்குகளை மீண்டும் பெற்று விட வேண்டும் என்ற கன(நினை)வில் இருந்தாலும் மிகப்பெரிய சந்தேகக் கண்ணோட்டம் இருந்து கொண்டே இருக்கிறது, தமிழிசை மற்றும் பிஜேபியினர் மத்தியில்.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாடார் சமூகத்தினர் வாக்கு வங்கியானது 32% உள்ளது. மேலும் இந்துகளின் வாக்கு சதவிகிதமானது 78.50% ஆகும். தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி பிரிக்கப்படுவதற்கு முன்பு திருச்செந்தூர் தொகுதியாக இருந்தபோது அதில் வென்ற நாடார் சமூகத்தைச் சேர்ந்த  ராதிகாசெல்விக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது திமுக ஆட்சிக்காலத்தில்தான். அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உள்ளது திமுக கட்சி. இதுவும் கனிமொழிக்கு கூடுதல் நம்பிக்கையை பெற்றுத் தந்துள்ளது. இதனால் பிஜேபி வேட்பாளர் தமிழிசையின் தூத்துக்குடியில் பெரும் சவால் உள்ளது என்பதே பல அரசியல் விமர்சர்களின் கருத்தாக உள்ளது. இதனால் தூத்துக்குடி தொகுதியில் பெரும்பான்மையான வாக்குடைய மக்களுடன் தன்னை நெருக்கமாகக் காட்டும் விதமாக "நான் பனங்காட்டுக்காரி", "நான் கற்றப்பரம்பரை குற்றப்பரம்பரை இல்லை" என்று பேசும் யுக்தியை செயல்படுத்துகிறார். இந்த யுக்தி வெற்றி பெறுமா என்பது விரைவில் நமக்குத் தெரிய வரும்.

 

 

 

 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.