Skip to main content

"ஆதார் கார்டுதான் எல்லாம் என்றார்கள்... குஷ்டம் வந்துவிடும் " - சீமான் சாபம்!

Published on 18/12/2019 | Edited on 18/12/2019

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி இந்த மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சீமான் பேசியதாவது, " இப்போது நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாம் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க மறுப்பதால் அவர்களை நம்மை சட்டத்தால் அடிமைப்படுத்த பார்க்கிறார்கள். அம்பேத்கார் பதவு செய்கிறார், ஆரியர்கள் வருகைக்கு பிறகு மூவாயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் வருணாசிரம கொள்கை உள்ளது என்று சொல்லியிருக்கிறார்.
 

yu



தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பது நிஜம். இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை இல்லை என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எங்கே போய் முடிய போகிறது என்று தெரியவில்லை. நமக்கு ஒரு அரசாங்கம் அமைந்திருக்கிறது. அதை போல இந்தியாவில் எங்கும் அமைந்தது இல்லை.வரலாற்றின் பெரும் பிழையை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. எதற்குதான் ஆட்சி அதிகாரம் இருக்கிறது. இந்த சட்டத்தை ஏன் எதிர்க்கவில்லை. நீங்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்த மதோதாவை நிறைவேற்றி இருக்க முடியாதே? இந்த மதோசா மாநிலங்களவையில் நிறைவேறியதற்கு மிக முக்கிய காரணம் அதிமுக. மக்களை பற்றிய கவலை அவர்களுக்கு சிறிதும் இல்லை. 

அவர்கள் நினைத்தால் இதனை தடுத்திருக்கலாம். இதை செய்ததன் மூலம் மிகப்பெரிய வரலாற்று துரோகத்தை அவர்கள் செய்துவிட்டார்கள். இதெற்கெல்லாம் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. நான் பெரிதும் மதிக்கும் தலைவர் ஐயா ராமதாஸ். திமுக, அதிமுக கூட்டணியில் அவர் இருக்கும் போது அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அறிக்கை வாயிலாக அதனை வெளிப்படுத்துவார். அவரே பலமுறை, கூட்டணி தர்மம் என்று எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார். இன்று கூட்டணி தர்மத்துக்காக வாக்களித்தோம் என்று சொல்லியிருக்கிறார். முதலில் அவர் இப்படி சொல்லியிருப்பார் என்று நான் நம்பவில்லை. யாரோ வதந்தி பரப்புகிறார்கள் என்றுதான் நினைத்தேன். பிறகு காணொளியை பார்த்த பிறகுதான் அதிர்ந்து போனேன். அவ்வளவு சமரசம் செய்ய வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. 

அனைவருக்கும் 15 லட்சம் பணம் போடுகிறோம் என்று சொல்லி, அப்பத்தா பையில் இருந்த சிறுவாட்டு காசை கூட தற்போது எடுத்துவிட்டார்கள். அனைத்துமே தவறான முடிவு. இந்த சட்டம் ஏதோ முஸ்லிம் மக்களுக்கோ, அல்லது இலங்கை தமிழர்களுக்கோ எதிரானதாக நாங்கள் பார்க்கவில்லை. இது மனித குலத்திற்கு எதிரானதாகவே நாங்கள் இதனை பார்க்கிறோம். இந்திய ஒருமைப்பாட்டிற்கும், இந்திய அரசியல் சாசனத்திற்குமே இது எதிரானது. எல்லாமே ஆதார் கார்டுதான் என்றார்கள். அனைவரும் ஓடிஓடி ஆதார் கார்டு எடுத்தார்கள். குஷ்டம் வந்தவர்களால் கைரேகை வைக்க முடியவில்லை. அவர்கள் ஆதார் கார்டு வாங்க முடியவில்லை. அவர்களுக்கு கிடைத்துவந்த 1000 ரூபாய் பணமும் நின்று போனது. இதற்கு காரணமான அவர்களுக்கெல்லாம் குஷ்டம் வருகின்றதா இல்லையா என்று பாருங்கள்" என்றார்.