Skip to main content

விவசாயிகளுக்காக போராடும் ஊராட்சிமன்ற தலைவர்களை மிரட்டும் போலீஸ்!

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
gg

 

சிமெண்ட் ஆலையின் ஆக்கிரமிப்பை அகற்றிய ஊராட்சி மன்றத்தலைவர்களின் அதிரடியால் விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, அந்த ஊராட்சி மன்றத்தலைவர்கள் மீது வழக்கு போட்டு மிரட்டுகிறது போலீஸ். கொஞ்சமும் சளைக்காமல், சட்டப்போராட்டத்திற்கு தயாராகிறார்கள் சம்பந்தப் பட்ட செந்துறை, நல்லாம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர்கள்.

 

31

                                                                   செல்லம்                 கடம்பன்

 

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பனிடம் இதுகுறித்து பேசிய போது, "செந்துறை, இலங்கை சேரி, நல்லாம்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் விவசாய நிலங்களுக்கு பத்தடி அகலம் உள்ள நீர்வழிப் பாதை செல்கிறது. இப்பகுதியில் உள்ள செட்டிநாடு சிமெண்ட் ஆலை நிர்வாகம் உஞ்சனிப்பகுதியில் நிலம் வாங்கி அங்கே சுண்ணாம்பு கல் சுரங்கம் தோண்டுகிறார்கள். அந்த சுரங்கத்திலிருந்து சுண்ணாம்பு கல்வெட்டி எடுத்து லாரிகள் மூலம் ஆலைக்கு கொண்டு செல்ல அந்த நீர் வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இப்படி நீர் வழிப்பாதையை மூடியதால் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை நீர் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் தேங்கி நின்று விட்டது. அருகிலுள்ள இலங்கை சேரி கிராமத்திலுள்ள ஏரிக்கு செல்லும் அந்த நீர்வழி தடுக்கப்பட்டதால் மழைநீர் ஏரிக்கு செல்லமுடியாமல், விவசாய நிலங்களை பாழ்படுத்திவிட்டது. ஆகவே, ஊராட்சி மூலம் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றினோம்.

 

இதனால் ஆலை நிர்வாகம், கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமாரை தூண்டிவிட்டு புகார் கொடுக்கச்செய்துள்ளது. அதனால், எங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது போலீஸ் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஆனால், போலீஸ் எங்கள் மீதே வழக்கு போடுகிறது. வருவாய் துறையினரும், காவல்துறையும் சிமெண்ட் ஆலை முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். எங்கள் பணியை முடக்க பார்க்கிறார்கள். இதையெல்லாம் சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறோம்'' என்கிறார் ஆவேசமாக.

 

33

                                                                                    கொளஞ்சிநாதன்


நல்லாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கொளஞ்சிநாதனிடம் கேட்டபோது, "ஆக்கிரமிப்பை அகற்றிய விவகாரத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும், அதிகாரிகளும் சிமெண்ட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசுகிறார்கள். இந்த சிமெண்ட் ஆலையினால் இப்பகுதியிலுள்ள கிராமங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இப்போது பிரச்சனை வந்த பிறகு, ‘உங்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறோம்’ என்று வருகிறார்கள். சமாதானத்தை ஏற்க முடியாது. வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்கிறார் உறுதியாக.

 

32

                                                                                    செல்வகுமார்

 

இலங்கை சேரியை சேர்ந்த விவசாயி செல்வகுமார், "சிமெண்ட் ஆலை நிர்வாகம் குவாரியில் இருந்து கற்கள் எடுத்துச்செல்ல நீர் வழித்தடம் செல்லும் ஓரமாக உள்ள எங்கள் பட்டா நிலங்களில் எங்கள் அனுமதி இல்லாமலேயே அகலப்படுத்துவதற்காக ரோடு அமைத்தார்கள். இதை தடுத்தபோது காவல்துறையை வைத்து என்னை மிரட்டினார்கள். இதன்பிறகு நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் வழக்கு தொடுத்தேன். நீர் வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று நீதிமன்றமும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதையும் மீறி சாலை அமைத்து குவாரியில் இருந்து கற்கள் ஏற்றி செல்கிறது சிமெண்ட் ஆலை லாரிகள்.

 

33444

                                                                 ஆக்கிரமித்து போடப்பட்ட சாலை 

 

இதுபற்றி விவசாயிகள் அளித்த புகாரின் அடிப்படையில் செந்துறை, நல்லாம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றியதால் ஊராட்சி தலைவர்கள், என்னையும் சேர்த்து மொத்தம் 8 பேர்கள் மீது வழக்கு போட்டுள்ளார்கள். செந்துறை போலீஸ், சிமெண்ட் நிறுவனத்திற்கு சாதகமாக இருந்து, எங்களை கைது செய்வதாக மிரட்டுகிறது'' என்கிறார் ஆத்திரத்துடன் .

 

இதுகுறித்து செட்டிநாடு சிமெண்ட் ஆலை மக்கள் தொடர்பு அலுவலர் ராஜா சிதம்பரத்திடம் கேட்டபோது, "உஞ்ஜனி பகுதி குவாரியில் இருந்து டிப்பர் லாரிகள் மூலம் சுண்ணாம்பு கற்கள் சிமெண்ட் ஆலைக்கு எடுத்து வரப்படும் வழி ஏற்கனவே மக்கள் பயன்படுத்திய பாதைதான். அதை ஆக்கிரமிப்பு செய்யவில்லை. சுரங்கத்திலிருந்து கற்களை ஏற்றி வருவது தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஆலை நிர்வாகத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை. அந்த ஒப்பந்ததாரர் அந்த பாதையில் நிலம் வைத்துள்ளார். அதில் தண்ணீர் செல்வதற்கு குறுக்கே போடப்பட்டுள்ள பைப் லைனை அப்புறப்படுத்தியுள்ளனர். அது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு போட்டுள்ளனர். இதற்கும் ஆலை நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஒப்பந்தக்காரரும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார், அது நிலுவையில் உள்ளது'' என்று சமாளிக்கிறார்.

 

3333

                                                                             மாவட்ட ஆட்சியர் ரத்னா

இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ரத்னாவிடம் கேட்டபோது, "அது சம்பந்தமாக கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்கிறார். ஆட்சியரின் நடவடிக்கைக்காக காத்திருக்கிறார்கள் அரியலூர் மாவட்ட விவசாயிகள்.

 

 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

“பிரதமர் மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில்களுக்கு பேரழிவு” - ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Jairam Ramesh alleges Damage for small and micro businesses under Prime Minister Modi's rule

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பா.ஜ.க மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட 10 லட்சத்திற்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) என்ற செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பைப் பெருமைப்படுத்தியது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மற்றும் திட்டமிடப்படாத கொரோனா கால ஊரடங்கு ஆகிய மும்முனை தாக்குதலால் MSME சுற்றுச்சூழல் அமைப்பை அழித்தது.

இதனை, ராகுல் காந்தி கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறார். மேலும், ஏப்ரல் 12 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்தியப் பேரணியின் மெகா பேரணியின் போது அவர் மீண்டும் வலியுறுத்தியது போல், மாநிலத்தின் தொழில்துறை மையமான கோவை பகுதியில் உள்ள எம்எஸ்எம்இ என்னும் மையத்தின் தவறான நிர்வாகத்தால் தத்தளிக்கின்றன. பணப்புழக்கத்தை அதிகம் நம்பியிருக்கும் கொங்குநாட்டின் MSMEகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. திருப்பூரில் ஏற்பட்ட திடீர் பொருளாதார சீர்குலைவைத் தாங்க முடியாமல் 1,000 சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள  எம்.எஸ்.எம்.இ.களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் கொடுத்த இரண்டாவது அடி ஜி.எஸ்.டி ஆகும். மிக சிக்கலான வரி விதிப்பு முறை அவசரமாக கொண்டு வரப்பட்டது. பெரிய நிறுவனங்கள் அவற்றின் பயனுள்ள வரி விகிதத்தை 27% லிருந்து 28% ஆகக் கண்டாலும், MSMEகள் அவற்றின் பயனுள்ள வரி விகிதத்தை முந்தைய ஆட்சியை விட இரு மடங்காகக் கண்டன. 2019 ஆம் ஆண்டளவில், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 50,000 தொழில் நிறுவனங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2017-18ல் மட்டும் 5.19 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர். 

மோடி அரசின் மோசமான நிர்வாகத்தினால் கொங்கு வட்டாரத்தில் இன்னும் சிறு, குறு தொழில்கள் பாதிப்பில் இருந்து மீளவில்லை. மோடி என்ற தனிமனிதர் ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு என்ற பேரிழப்பால் பொருளாதார நடவடிக்கையே முடங்கிப் போய்விட்டது. தொழிலாளர்களுக்கு சிறு, குறு தொழில் நிறுவனங்களால் ஊதியம் வழங்க முடியாத நிலையால் பொருள் நுகர்வும் முடங்கிப் போனது. நடைமுறை மூலதனத்தை நம்பியே செயல்படும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.