Skip to main content

அரபு நாட்டுப் பெண்கள் தொடர்பாகப் பேசியதை மறக்கடிக்க மதவாதிகளின் திட்டம்தான் ஜோதிகா விவகாரம் - கோவி. லெனின் பேச்சு!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020

 

fg


கரோனா பயம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் ஜோதிகா கூறிய கருத்தை மதவாதிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். நடிகர் சூர்யாவும் தன்னுடைய மனைவியின் கருத்தை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார், இதுதொடர்பாக பத்திரிகையாளர் கோவி. லெனின் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
 

நடிகை ஜோதிகா கோயில்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்று கூறியது தற்போது சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. எப்படி அவர் கூறலாம் என்று சிலர் அவருக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக பேசிய ஜோதிகாவின் கணவரும் நடிகருமான சூர்யா இந்த விவகராத்தில் நாங்கள் ஜோதிகாவுக்கு ஆதரவாக இருப்போம் என்றும், அவர் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த சர்ச்சை தொடர்பாக உங்களின் பார்வை என்ன?

சமூக வலைத்தளம் என்பது தற்போதைய நிலையில் பெரிய அக்கப்போரை செய்து வருகின்றது. உண்மையான நிலையில் இருந்து திசை திருப்பல் வேலையை மிக அழகாக அது செய்து வருகின்றது. தற்போது ஜோதிகா ஒரு கருத்தைச் சொல்லிவிட்டார்கள் என்று அதைப் பெரிதுபடுத்தி வருகிறார்கள். அவர் ஒன்றும் இதுவரை சொல்லாத கருத்தைச் சொல்லவில்லை. பலபேர் அவர் சொன்ன கருத்துகளைத் தொடர்ந்து கூறி வந்திருக்கிரார்கள். ஆன்மிகப் பெரியவர்கள் முதல் பலர் அத்தகைய கருத்துகளைக் காலங்காலமாகக் கூறி வந்திருக்கிறார்கள். பாரதியார் சொல்லி இருக்கிறார், விவேகானந்தர் கூறியிருக்கிறார், சூரியா சொன்னது போல் திருமூலர் சொல்லி இருக்கிறார். எல்லாருமே அத்தகைய கருத்துகளைக் கூறியிருக்கிறார்கள். இங்கே என்ன பிரச்சனை இருந்தது என்றால், அரபு நாட்டைச் சேர்ந்த பெண்கள் பற்றி இந்துத்துவவாதிகள் கூறிய கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அவர்களின் சர்ச்சை கருத்து அரபு நாட்டைச் சார்ந்தவர்கள் தோண்டி துருவி எடுத்ததால் அங்கே இந்துத்துவவாதிகள் திரும்ப பேக் அடிக்கின்ற சூழ்நிலைகள் உருவானது. 
 

http://onelink.to/nknapp


கிட்டதட்ட பிரதமர் முதல் பாஜக அடிமட்ட தொண்டர்கள் வரை அந்த நிலைமை இருந்தது. சொல்லப்போனால் ரம்ஜானுக்கு அவர்கள்தான் ஆறு வேலை தொழுகை செய்வார்களோ என்று நினைக்கும் அளவுக்குப் போனது. இந்த மாதிரி நமக்குப் பின்னடைவாக இருக்கின்ற போது அதை எப்படிச் சரிசெய்ய வேண்டும் என்று அவர்கள் யோசித்த போது அவர்களுக்கு கிடைத்ததுதான் ஜோதிகாவின் விவகாரம். அவர்கள் அந்தக் கருத்தைக் கூட லாக் டவுனுக்கு முன்னாடி பேசினார்கள். அதைத் தற்போது திசை திருப்ப வேண்டும் என்பதற்காக இணையத்தளங்களில் பதிவிட்டு தற்போது அதனைப் பெரிய பிரச்சனை ஆக்குகிறார்கள். ஒரு குறிப்பிட்ட படம் ஒன்று எடுக்கும் போது ஏற்பட்ட அனுபவத்தை ஜோதிகா அதில் தெரிவித்திருப்பார்கள். இதை அந்தப் படத்தின் இயக்குநரே தன்னுடைய முகநூல் பதிவில் தெரிவித்திருப்பார். எனவே தேவையில்லாத விவகாரத்தைக் கிளப்பி உண்மை விவகாரத்தைப் பின்னுக்குத் தள்ளவே இந்தச் சர்ச்சையைத் தற்போது கிளப்பி உள்ளார்கள்.