Skip to main content

இங்கயுமா குப்பையைக் கொட்டுவாங்க... மிரளவைத்த மனித இனம்

Published on 18/06/2018 | Edited on 18/06/2018
TRASH

 

 

 


உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் சிகரம். இது 8,848 மீட்டர் நீளமுடையது. மனிதர்கள் ஒரு இடத்திற்கு அதிகமாகசென்றால் அந்த இடத்திற்கு நிச்சயம் ஒரு சேதாரம் ஏற்படும். அந்தவகையில் ஒரு இடத்திற்கு மிக அதிகம் சேதாரம் ஏற்படுவது குப்பைகளால்தான். இதற்கு எவரெஸ்ட்டும் விதிவிலக்கில்லாமல் போனது. ஆம், எவரெஸ்டிலும் குப்பைகள் அதிகமாகிவிட்டன. மலையேற்றத்திற்காக எவரெஸ்ட் சிகரத்திற்கு வரும் நூற்றுக்காணக்கான வீரர்கள் தாங்கள் கொண்டுவரும் கூடாரம், உணவுப்பொருட்கள், குடிநீர் பாட்டில்கள், காலி கேஸ் சிலிண்டர்கள் போன்றவைகளையும், மனிதக் கழிவுகளையும் அங்கேயே விட்டுசென்றுவிடுகின்றனர். இதனால் எவரெஸ்ட் சிகரம் குப்பைக் கூழமாக மாறியுள்ளது. மலையேற்றவீரர்கள் கீழே இறங்கும்போது 8 கிலோ கழிவுகளை கொண்டுவந்தால் மலையேற்ற கட்டணம் திரும்பத்தரப்படும். என்று நேபாள அரசு அறிவித்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. கடந்த 2017வரை மலையேற்ற வீரர்கள் கிட்டதட்ட 25டன் குப்பைகளையும், 15 டன் மனிதக் கழிவுகளையும் கொண்டுவந்துள்ளனர். என சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

 

 

 

புவியின் மிகப்பெரிய பகுதி கடல். ஆனால் இன்று மிகப்பெரிய குப்பைக்கூழமாக மாறியிருப்பதும் கடல்தான். கடல்வாழ் உயிரினங்களின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது, பாட்டில்களில் மாட்டிக்கொள்வது, எண்ணெய் கழிவுகளால் இறப்பது இவ்வாறு பல ஆபத்தான செய்திகளை நாம் அவ்வப்போது பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாம் இன்று எவ்வளவுதான் வளர்ச்சி, வளர்ச்சி என்று கத்தினாலும், சுற்றுச்சூழலை பொறுத்தவரை சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டபோதே அழிவு ஆரம்பித்துவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 

 

 

 

 

 

Next Story

கடலில் கலந்த எண்ணெயில் கலந்திருப்பது என்ன? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
'Phenol, grease in Ennur Estuary'-Pollution Control Board releases shock report

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

மெரினா கடற்கரை வரை தற்பொழுது அந்த எண்ணெய் படிவுகள் படர்ந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மெரினா மற்றும் பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கடல் அலையில் கால்களை வைத்து விளையாடியவர்களின் பாதத்தில் எண்ணெய் துளிகள் ஒட்டிக்கொண்டது. இது தொடர்பாக வீடியோக்கள் எடுத்த சுற்றுலா பயணிகள், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். காலில் ஒட்டிய அந்த எண்ணெய் படலம் எவ்வளவுதான் கழுவினாலும் போகவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் ஆய்வு செய்ததில் அதிக அளவு ஃபீனால், கிரீஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு எண்ணுரின் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப்பகுதியில் குறிப்பாக பக்கிங்காம் கால்வாயில் சிபிசிஎல் தொழிற்சாலைக்கு தெற்கு புறத்தில் உள்ள நீர் மாதிரிகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து பகுப்பாய்வு செய்தது. அந்த ஆய்விற்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அதிர்ச்சி தரும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. எண்ணூர் கழிமுகத்தில் கலந்த எண்ணெய் கலவையில் அதிக அளவில் ஃபீனால் மற்றும் கிரீஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கச்சா எண்ணெயாக அல்லது சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களாக இருக்கலாம் என தெரிய வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் மாதிரிகளை ஆய்வு செய்த பொழுது ஒரு லிட்டருக்கு 48 கிராம் அளவிற்கு ஃபீனால் இருப்பது தெரியவந்துள்ளது. 10 கிராமில் ஒரு கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும், ஒரு லிட்டரில் 728 மில்லி கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Next Story

எண்ணெய் படர்ந்ததால் பாதிக்கப்பட்ட மீனவர்கள்; எண்ணூரில் அதிகாரிகள் ஆய்வு

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
 Fishermen affected by oil spills; Investigation by officials in Ennore

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவுகள் கலந்துள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகள் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் படர்ந்து இருக்கிறது. இந்நிலையில்  8 நாட்களாக அங்கு படர்ந்து இருக்கும் எண்ணெய் கழிவுகளை அகற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

எண்ணெய் கழிவுகள் கலந்துள்ள பகுதியில் ஆய்வுப் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் என தனித்தனியாக ஆய்வு பணிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த எட்டு நாட்களாகியும் இன்னும் எண்ணெய் கழிவுகளை அகற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

எண்ணெய் படர்ந்துள்ளதால் படகுகள், மீன்பிடி வலைகள் சேதமடைந்துள்ளது. 'ஆயில் கண்டைன்மெண்ட் பூம்' என்ற கருவி மூலம் எண்ணெய் கழிவுகள் பரவுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காட்டுக்குப்பம், சின்ன குப்பம் உள்ளிட்ட இடங்களில் ஏழு குழுக்களாக பிரிந்து தற்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.