டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது.
47 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் புதிய அலுவலகம் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளனர்.
டெல்லி கோட்லா சாலையில் உள்ள இந்த புதிய அலுவலகத்திற்கு 'இந்திரா பவன்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து மாடிகள் கொண்ட இந்த புதிய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் திறப்பு விழாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
அலுவலகத்தைத் திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், 'அரசியலமைப்புச் சட்டம் நமது சுதந்திரத்தின் சின்னம் அல்ல என மோகன் பகவத் கூறியது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல். 1947-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று சொல்வது இந்தியரை அவமதிக்கும் செயல்'' என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.