Skip to main content

விறு விறு பாலமேடு ஜல்லிக்கட்டு; 14 பேர் காயம்

Published on 15/01/2025 | Edited on 15/01/2025
nn

பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த போட்டியை காண பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வருகை தருவார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது வரை பாலமேடு ஜல்லிக்கட்டில் மூன்று சுற்றுகள் முடிவடைந்துள்ளது. மொத்தமாக 14 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுவரை 107 மாடுகள் களம் கண்டுள்ளன அதில் 19 மாடுகள் பிடிபட்டுள்ளது. தகுதியான வீரர்களாக ஐந்து பேர் தொடர்ந்து வருகின்றனர்.

சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் சார்பில் கார் பரிசு வழங்கப்படுகிறது. சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசு வழங்கப்பட இருக்கிறது. நேற்று நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டை விட பாலமேடு ஜல்லிக்கட்டு களம் நீளமானது என்பதால் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சார்ந்த செய்திகள்