Skip to main content

சின்னத்திரை நடிகையின் காதலன் தற்கொலை. –உதயநிதி மன்றத்தில் சலசலப்பு.

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
nilani

 

 

திருவண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் காந்திலலித்குமார். சினிமா ஆசையில் சென்னை சென்றவர் சினிமாவில் சிலப்பல வேலைகள் செய்துக்கொண்டு சினிமாவில் சாதிக்க முயற்சித்துக்கொண்டு இருந்துள்ளார். அதேநேரத்தில் தற்போதைய திமுக எம்.எல்.ஏவும், நடிகர் உதயநிதிஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், உதயநிதி நற்பணி மன்ற நிர்வாகியுமான மகேஷ்பொய்யாமொழியின் நட்பு வட்டத்தில் இணைந்தார். இதனால் திருவண்ணாமலை மாவட்ட உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டார்.
 


சொந்தவூர் திருவண்ணாமலையாக இருந்தாலும் சென்னையிலேயே இருந்தார். சின்னத்துறை நடிகையான நிலானி சந்தித்து காதலை கூறியுள்ளார். இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்ததாக கூறப்படுகிறது. ஏதோ ஒருக்காரணத்தால் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்துள்ளனர், காதல் முறிந்தாலும் நட்பாக இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு காந்தியின் நண்பரும் திருவண்ணாமலையை சேர்ந்த பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றுவதாக கூறப்படும் வினோத் என்பவர், நிலானியிடம் தவறாக பேசியுள்ளார். உன் நண்பனே இப்படின்னா, நீயும் அவனைமாதிரிதானே இருப்ப என சண்டைப்போட நட்பும் உடைந்ததாக கூறப்படுகிறது. இதில் கோபமான காந்தி, நண்பன் விநோத்தின் நடத்தை குறித்த ஆடியோக்களை வெளியிட திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பிரச்சனை இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மூலம் சரியானதாக கூறப்படுகிறது.

 

nilani




இந்நிலையில் இன்று செப்டம்பர் 17ந்தேதி காலை சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற காந்தி, நடுரோட்டில் வண்டியை நிறுத்திவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மேல் ஊத்திக்கொண்டு தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். நடுரோட்டில் ஒரு வாலிபர் தீக்குளித்தை பார்த்து அதிர்ச்சியான பொதுமக்கள் இதுப்பற்றி காவல்துறைக்கு தகவல் தர அவர்கள் வந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.



சில தினங்களுக்கு நிலாணி, மயிலாப்பூரில் உள்ள கோகுலம் இல்லத்தில் சின்னத்திரை சீரியல் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்தபோது அங்கு சென்ற காந்தி, நிலானியிடம் என்னை திருமணம் செய்துக்க என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட இது தொடர்பாக என்னை திருமணம் செய்துக்கொள் என கட்டாயப்படுத்துகிறார் என மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக விசாரிக்க காந்தியை போலிஸ் அழைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று தற்கொலை செய்துக்கொண்டார்.
 


இது அவரது நண்பர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைரியமான அவன் தற்கொலை செய்துக்கொள்ளும் அளவுக்கு கோழையல்ல. நிலாணி தொடர்பாக ஏதாவது எதிர்க்கொள்ள முடியாத அளவுக்கு மிரட்டல் வந்துயிருக்க வேண்டும் அல்லது பழைய பிரச்சனையால் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் யாராவது அவரை மிரட்டியிருக்க வேண்டும் என்கிறார்கள் அவரது நண்பர்கள் வட்டாரத்தில். இந்த தற்கொலை உதயநிதி ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.