Skip to main content

“ஆஸ்கர் அவார்ட் கிடைக்கும்னா நாளாவது குழந்தை பெத்துக்க ரெடி” - சுராஜ் வெஞ்சரமூடு

Published on 21/03/2025 | Edited on 21/03/2025
suraj speech in veera dheera sooran audio and trailer launch

விக்ரம் நடிப்பில் சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. இப்படம் இரண்டு பாகமாக உருவாகுவதாகவும் முதலில் இரண்டாவது பாகத்தை வெளியிட்டு பின்பு முதல் பாகத்தை வெளியிடலாம் என்ற வித்தியாசமான பிளானில் படக்குழு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை ரியா ஷிபு தயாரித்திருக்க எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை ஆவடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில்  சுராஜ் வெஞ்சரமூடு பேசுகையில், “எனக்கு தமிழும், தமிழ் சினிமாவும் மிகவும் பிடிக்கும். இந்த ஆடியோ விழாவில் தான் ஜி.வி. சாரை நேரில் சந்திக்கிறேன். வாழ்த்துக்கள் சார். நானும் உங்கள் ரசிகன் தான். உங்களுடைய இசையில் வெளியான ‘கோல்டன் ஸ்பேரோ...’ பாடல் என்னுடைய ஃபேவரைட். தமிழ் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநர் அருண்குமாருக்கு நன்றி. அவர் உண்மையான தங்கமான மனிதன். அவருடைய இயக்கத்தில் வெளியான 'சித்தா' படத்தை பார்த்தேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இந்த படத்தில் பணியாற்றிய போது 'சித்தா' படத்தை விட வேற லெவலில் அவருடைய உழைப்பு இருந்ததை பார்க்க முடிந்தது. அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகனாகவும் மாறிவிட்டேன். நான் தற்போது கொஞ்சம் கொஞ்சம் தமிழை பேச கற்றுக் கொண்டிருக்கிறேன். இதற்கு முக்கிய காரணமே இயக்குநரும், இந்த படக் குழுவினரும் தான். இந்தப் படம் வெளியான பிறகு இயக்குநருக்கு நான் மலையாளம் சொல்லித் தருவேன்.

விக்ரம் சார் மிகப் பெரிய நடிகர் என அனைவருக்கும் தெரியும். அவருடன் நடிக்கும்போது அவர் நடித்த கதாபாத்திரங்கள் எனக்கு வரிசையாக நினைவுக்கு வந்தது. அதுபோன்ற கதாபாத்திரத்தை எல்லாம் இவர் தானே நடித்தார் என்று அவரை நான் வியந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். விக்ரம் சார் ஐ லவ் யூ. நானும் உங்களின் ரசிகன் தான். எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான 'நியூ 'படம் பார்த்த பிறகு அவருடைய ரசிகனாக மாறிவிட்டேன். அதற்குப் பிறகு அவர் வெரைட்டியான கேரக்டரில் நடித்தார். பிறகு அவருடைய நடிப்பிற்கும் நான் ரசிகன் ஆகிவிட்டேன். ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் வைத்திருப்பார். அதுவும் எனக்கு பிடிக்கும். அவர் நடிப்பில் வெளியான 'இறைவி' படம் எனக்கு மிகவும் பிடிக்கும். 

எனக்கு மூணு குழந்தைகள் இருக்கிறது. முதல் குழந்தை பிறந்த போது முதல் ஸ்டேட் அவார்ட் கிடைத்தது. இரண்டாவது குழந்தை பிறந்த போது இரண்டாவது ஸ்டேட் அவார்ட் கிடைத்தது. மூன்றாவது குழந்தை பிறந்த போது ஸ்டேட் அவார்டும் நேஷ்னல் அவார்டும் ஒரே வருடத்தில் கிடைத்தது. இனிமேல் ஆஸ்கர் அவார்ட் எனக்கு கிடைக்கும்னா நாளாவது குழந்தைக்கு நான் ரெடி” எனக் கலகலப்பாக பேசினார்.     

மேலும், “ஹெச் ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான 'முரா 'படத்தில் நான் நடித்திருக்கிறேன். இதற்காக கடுமையாக உழைத்த தயாரிப்பாளர் ரியா ஷிபுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்திற்காக மார்ச் 27ஆம் தேதியன்று வெளியாகிறது. திரையரங்கத்திற்கு நீங்கள் வரும்போது உங்கள் நண்பர்களையும், குடும்ப உறுப்பினர்களையும், அனைவரையும் அழைத்துக் கொண்டு வர வேண்டும். இது என்னுடைய பணிவான வேண்டுகோள்.  இந்த படம் ஒரு தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ் மூவி தான். சாதாரண படம் அல்ல . ஃபர்ஸ்ட் சீனிலிருந்து இல்ல.. ஃபர்ஸ்ட் ஷாட்ல இருந்தே கதை ஆரம்பிச்சுடும். அதனால இந்த படம் பார்க்கும்போது அஞ்சு நிமிஷம் முன்னாடியே தியேட்டருக்கு  வந்துடுங்க. டோன்ட் மிஸ் பர்ஸ்ட் ஷாட்” என்றார்.

சார்ந்த செய்திகள்