"கடை விரித்தேன் கொள்வாரில்லை' என்கிற நிலைமையில் இருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். கூட்டணி விசயத் தில் இவர் எடுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து வருவது தான் தமிழக அரசியலில் ஹைலெவல் டாக். இதனால் ஏகத்துக்கும் விஜய் அப்செட் டாகியிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.

"தனித்துப் போட்டியிடுவதால் உங்கள் கட்சி ஜெயிக்கப்போவதில்லை; பிரதான கட்சியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே உங்களால் கணிசமான வெற்றியைப் பெறமுடியும்' என்று நடிகர் விஜய்யுடனான முதல் சந்திப்பிலேயே வலியுறுத்தியிருந்தார் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பீகார் பிரசாந்த் கிஷோர்.

vv

இதனையடுத்து, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க விஜய்யும், விஜய்யுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிச் சாமியும் பரஸ்பரம் விரும்பி இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், இரண்டுகட்டப் பேச்சுவார்த்தையின் முடிவில், அ.தி.மு.க.வின் சீட் ஷேரிங்கிற்கு ஒப்புக்கொண்டால் விஜய்யுடன் கூட்டணி; இல்லையேல் வேண்டாம். அ.தி.மு.க. தலைமையில் வலிமையான கூட்டணி உருவாகும் என்று த.வெ.க.வின் தூதுவர்களிடம் தெரிவித்துவிட்டார் எடப்பாடி. இதனால் விஜய்யுடன் கூட்டணி வேண்டாம் என்பது அ.தி.மு.க.வின் தற்போதைய முடிவாக இருக்கிறது என்பதுதான் அ.தி.மு.க.வின் மேலிடத்தில் உலாவரும் ரகசியம்.

இதுகுறித்து அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் நாம் விசாரித்தபோது, "பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லைங்கிற நிலைப்பாட்டை எடப்பாடி எடுத்திருந்த நிலையில், அ.தி.மு.க.வுக்கு வலிமையான கூட்டணி உருவாக வேண்டுமென்பது அவசியமாகவும் தேவையாகவும் இருந்தது. அதற்கு தி.மு.க. கூட்டணி உடைய வேண்டும். ஆனால், அந்த கூட்டணி உறுதியாக இருந்துவருகிறது. அதனால், நடிகர் விஜய்யுடன் கூட்டணி வைப்பது என்ற முடிவை எடுத்திருந்தார் எடப்பாடி.

Advertisment

அதே சமயத்தில், தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் ஆதவ்அர்ஜுனா, விஜய்யை அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுசெல்ல விரும்பி, விஜய்யுடன் விவாதித்தார். இதற்காக பிரசாந்த் கிஷோரையும் கொண்டுவந்தார் ஆதவ். அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொண்ட விஜய், "நம்முடைய பலத்துக்கு எந்த வகையிலும் பங்கம் வந்துவிடக்கூடாது; அதற்கேற்ப கூட்டணி கண்டிசன்களை அ.தி.மு.க.வுக்கு தெரிவித்து ஒப்புதல் பெற்றால் கூட்டணிக்கு சம்மதம் தெரிவியுங்கள்' எனச் சொல்லியிருக்கிறார்.

இந்த முடிவை அவர் எடுத்ததற்கு சில பின்னணிகள் உண்டு. அதாவது, "கடை விரித்தேன்; கொள்வாரில்லை' என்பதுபோல, கூட்டணி ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு தருகிறோம் எனச் சொல்லியும் நம்முடன் கூட்டணி வைக்க யாருமே முன்வரவில்லையே என்கிற ஆதங்கமும், உண்மை யில் நமக்கு 25 சதவீத வாக்கு வங்கி தமிழகத்தில் இருக்கிறதா? என்கிற கேள்வியும் தான் விஜய்யை பயமுறுத்தியது. அதனை உணர்ந்ததனால்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க அவர்களிடம் பேசுங்கள் என விஜய் சம்மதித்தார்.

அந்த வகையில், கூட்டணி குறித்து எடப்பாடிக்கு தகவல் தெரிவித்தார் ஆதவ் அர்ஜுனா. த.வெ.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான், அ.தி.மு.க.வில் அவருக்கு தொடர்பான மேல்மட்டத்துடன் பேசினார். இதெல்லாம் தொகுத்து எடப்பாடிக்கு தெரிவிக்கப்பட்டது. அதாவது, 234 சட்டமன்றத் தொகுதிகளை இருவரும் சரிபாதியாக 117, 117 என பிரித்துக் கொள்ளலாம். முதலமைச்சர் பதவி அ.தி.மு.க.வுக்கு, துணை முதல்வர் பதவி எங்களுக்கு என சீட் சேரிங்கை தெரிவித்ததுடன், அமைச்சர் பதவிகளில் கணிசமான எண்ணிக்கையும் வேண்டும் என த.வெ.க. தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டது.

Advertisment

vv

சரி பாதி எண்ணிக்கை வேண்டும் எனச் சொல்லப்பட்டபோதே ஏகத்துக்கும் எரிச்சலடைந் தார் எடப்பாடி. கூட்டணி ஆட்சிக் கொள்கையும் எங்களிடத்தில் இல்லை என அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை விவரித்தார். இத்துடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது. இரண்டாம் கட்டமாக நடந்த பேச்சுவார்த் தையின்போது, 60 இடங்கள்; துணை முதல்வர்; 5 அமைச்சர் கள் என த.வெ.க. தரப்பில் முன்வைக்கப்பட்டபோது, "காய்கறி மார்க்கெட்டில் பேரம் பேசுவது மாதிரி எங்களிடம் பேசவேண்டாம். 25 சதவீத வாக்கு வங்கி உங்களிடம் இருப்பதாக சொல்கிறீர்கள். அதற்கு என்ன ஆதாரம் என சொல்லவில்லை.

ஆனால், விஜய்யின் சினிமா இமேஜை வைத்து தேர்தல் அரசியலில் விஜய்யின் செல்வாக்கு என்ன என்பது பற்றி நாங்களும் ஒரு சர்வே எடுத்திருக்கிறோம். அதில் விஜய்க்கு 5 முதல் 7 சதவீத ஆதரவு மட்டுமே கிடைக்கிறது. தேர்தல் களத்தில் ஆளும்கட்சியான தி.மு.க. அதிரடி அரசியல் செய்தால் இந்த சதவீதம் கூட விஜய்க்கு உத்தரவாதம் கிடையாதுன்னு எங்கள் சர்வே சொல்லுது. அதனால், கூட்டணி வைத்துக்கொள்ளலாம்; எங்களால் 15 சீட் மட்டுமே ஒதுக்க முடியும். ஏன்னா, வோட் பேங்கை நிரூபித்திருக்கும் முக்கிய சில கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரவிருக்கிறது. அதனால் அவர்களுக்கும் சீட் ஒதுக்கீடு செய்யவேண்டும். கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலை இப்போதுதான் சந்திக்கப்போகிறீர்கள். அதில் உங்கள் வலிமையை நிரூபியுங்கள். அடுத்த தேர்தலில் நாங்களே எண்ணிக்கையை அதிகரித் துத் தருகிறோம்' என எடப்பாடி தெள்ளத்தெளி வாகக் கூறி விட்டார்.

இதற்கு விஜய் தரப்பினர் ஒப்புக்கொள்ள வில்லை. அ.தி.மு.க.வும் அதைப்பற்றி கவலைப்பட வில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், தி.மு.க. கூட்டணியிலிருந்து அதன் தோழமைக் கட்சிகள் பிரிந்து வருவதற்கான சாத்தி யக்கூறுகள் இல்லாத நிலையே தொடர்வ தால், பிளவுபட்டிருக் கும் அ.தி.மு.க.வை ஒற்றுமைப்படுத்த வும், பா.ஜ.க. வுடன் கூட் டணி வைக்கவு மான ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகிறார் எடப்பாடி. இந்த தோற்றம் அப்படியே பலிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

அந்த வகையில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என ஒரு கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதில், தே.மு.தி.க.வை மட்டும் தி.மு.க. இழுக்கத் தொடங்கியிருக்கிறது. அ.தி.மு.க. -பா.ஜ.க. தலைமையில் இப்படி ஒரு கூட்டணி அமைவது த.வெ.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளர்களுக்கு கிலியைத் தந்துள்ளது. உடனே இதனை விஜய்க்கு தெரிவித்திருக்கிறார்கள்.

அவருக்கும் இது கிலியைத் தர, என்ன செய்யலாம் என மாற்றி யோசியுங்கள் என வியூக வகுப்பாளர்களுக்கு கட்டளையிட்டுள்ளார் விஜய். அதன் ஒரு பகுதிதான், சீமானுடன் கூட்டணி வைக்க அவரை அணுகுவது என்கிற முடிவை எடுத்து சீமானை சந்தித்துள்ளனர் வியூக வகுப்பாளர்கள்” என்று அண்மைக்காலத்தில் நடந்துவரும் கூட்டணி ரகசியங்களை விவரித்தனர் அ.தி.மு.க.வினர்.

விஜய் தரப்பினரை சீமான் சந்தித்திருப்பது பற்றி நாம் தமிழர் கட்சி வட்டாரங் களில் விசாரித்தபோது, "உங்களைச் சந்திக்க வேண்டும் என த.வெ.க.வின் வியூக வகுப்பாளர்கள் சீமானை தொடர்புகொண்டு கேட்டபோதே, அதிர்ச்சியடைந்திருக்கிறார் சீமான். ஏன்னா… 25 சதவீத வாக்கு வைத்திருப்பதாக சொல்லும் இவர்கள், நம்மை ஏன் சந்திக்க வேண்டும் என்கிற சந்தேகம் தான் அவரது அதிர்ச்சிக்கு காரணம். இருந்தாலும் அவர் களை வரச் சொல்லியிருக்கிறார். சந்திப்பும் நடந்தது. சீமானுடன் கூட்டணி வைக்க விஜய் விரும்புவதை வியூக வகுப்பாளர்கள் விவரிக்க, "என் தலைமையில்தான் கூட்டணி; 25 சீட் ஒதுக்குகிறேன். ஓ.கே.ன்னா என்னை வந்து விஜய் சந்திக்கட்டும். மற்றதைப் பேசிக்கொள்ளலாம். இதைத்தவிர வேறு தரவுகள் எனில் கூட்டணி வேண்டாம். அவரது வழியில் அவர் செல்லட்டும்' எனப் பொட்டில் அடித்தமாதிரி சொல்லிவிட்டார் சீமான்''’ என்கின்றனர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.

vv

இந்த சூழலில் த.வெ.க. தரப்பில் விசாரித்தபோது, "விஜய்யின் செல்வாக்கு பற்றி ஆதவ் அர்ஜுனாவின் அமைப்பு, சர்வே எடுத்துப்பார்த்துள்ளது. எந்த தொகுதியிலும் 25 சதவீத ஆதரவு கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், விஜய் போட்டியிட்டு ஜெயிக்கக்கூடிய அளவுக்கு நம்பிக்கையான தொகுதியைக்கூட அடையாளப்படுத்த முடியவில்லை. அதாவது, இந்த தொகுதியில் போட்டியிட்டால் விஜய் எளிமையாக வெற்றி பெறுவார் எனச் சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு தொகுதியும் சிக்கவில்லை. கேப்டன் விஜய காந்த் கட்சி ஆரம்பித்து முதல்முறையாக தேர்தலில் தனித்து தே.மு.தி.க. போட்டி யிட்டபோது, விருத்தாச்சலத்தில் ஜெயித்தார் கேப்டன். அவரை எதிர்த்து பா.ம.க. நின்றதால் அவரால் ஜெயிக்க முடிந்தது. மாறாக, தி.மு.க. போட்டியிட்டிருந்தால் விஜயகாந்தே தோற்றுப் போயிருப்பார்.

இந்த எதார்த்தத்தை ஒரு கட்டத்தில் உணர்ந்ததனால்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து கௌரவான இடங்களில் தே.மு.தி.க. ஜெயிக்க முடிந்தது. இந்த உண்மையை, இந்த எதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் வியூக வகுப்பாளர்கள் விஜய்யை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தங்கள் மாவட்டத்தில் சர்வே எடுத் துப் பார்த்தனர். ஒரு தொகுதியிலும் வெற்றிக் கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மாவட்ட நிர்வாகிகளும் அப்செட்டில்தான் இருக்கின்றனர்.

அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி உருவாகும் சூழல், வெற்றிக்கான வாய்ப்பு இல்லாதது உள்ளிட்ட பிரச்சனைகளால்தான் சீமானுடன் கூட்டணி வைக்க அதீத முயற்சியில் குதித்துள்ளார் விஜய்''’என்கின்றனர் த.வெ.க.வினர்.