Skip to main content

"எப்படி இருந்த நாங்க" - 3வது பாடலை வெளியிட்ட கார்த்தி படக்குழு!

Published on 15/03/2021 | Edited on 15/03/2021

 

ffdb


ட்ரீம் வாரியர்ஸ் சார்பில், எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சுல்தான்'. இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இது, நடிகர் கார்த்தியின் 19-வது படமாகும். திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு, கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைபட, கரோனா நெருக்கடி தளர்வுக்குப் பிறகு, மொத்த காட்சிகளையும் படமாக்கி, படப்பிடிப்பை நிறைவு செய்தது படக்குழு. 
 

பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியான படத்தின் டீசருக்கும், பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியான ‘ஜெய் சுல்தான்’ என்ற பாடலுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் இரண்டாம் பாடலான “யாரையும் இவ்ளோ அழகா...” எனத் தொடங்கும் பாடல் மார்ச் 5ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தற்போது 'எப்படி இருந்த நாங்க' என்ற 3வது சிங்கிள் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்