Skip to main content

கோட் படப்பிடிப்பால் மக்கள் அச்சம்

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
goat movie shoot update

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’லிரிக் வீடியோ வெளியானது. இதையடுத்து இரண்டாவது பாடல் ஜூன் மாதம் வெளியாகும் என வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். அடுத்த மாதமான ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு பாடல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் விஜய்க்கான வி.எஃப்.எக்ஸ் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. பின்பு படப்பிடிப்பு தளத்தில் விஜய் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் புதுச்சேரியில், சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் ஒரு கார் மற்றொரு கார் மீது விழுவது போன்று படமாக்கப்பட்ட நிலையில், கார் விழும் சத்தம் பெரியளவில் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர். 

மேலும் கிழக்கு கடற்கரை சாலையிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அங்கு நள்ளிரவில் படப்பிடிப்பு நடந்த நிலையில் கார் வெடித்து தீப்பற்றி எரிவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுவன் மீது சரிந்து விழுந்த விஜய்யின் பிறந்தநாள் பேனர்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Vijay  birthday banner fell on the boy

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் விஜயபுரம் என்ற பகுதிக்கு செல்லும் வழியில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு பிறந்தநாள் விழா பேனரை அவரது ரசிகர்களான தொண்டர்கள் வைத்திருந்தனர். ஜீன் 25 ஆம் தேதி மாலையில் மழை பெய்வதற்கு முன்பாக பலத்த காற்று வீசியது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான விஜய் பிறந்த நாள் டிஜிட்டல் பேனர் காற்றின் வேகத்தில் நிற்க முடியாமல் கீழே சாய்ந்தது. டிஜிட்டல் பேனர் சாய்கின்ற போது அங்கு நடந்து சென்று கொண்டிருந்த 10 வயது சிறுவன் மேல் விழுந்தது.

நல்வாய்பாக பேனர் சிறுவன் மீது விழுந்த போது அதே இடத்தில் ஒரு இரு சக்கர வாகனமும் நின்று கொண்டிருந்தது. சிறுவன் மீதும் இருசக்கர வாகனத்தின் மீதும் அந்த டிஜிட்டல் பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தின் உதவியால் அந்த சிறுவனுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. டிஜிட்டல் பேனர் விழுந்ததைக் கண்ட அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அதை தூக்கி அதன் அடியில் சிக்கிக் கொண்ட சிறுவனை மீட்டனர். சிறுவன் காயங்கள் இன்றி வீட்டிற்கு சென்றான். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் தொடர்ந்து அதே இடத்தில் அகற்றப்படாமல் இருந்ததால் காற்றின் வேகத்தில் அது சாய்ந்து சிறு விபத்தை ஏற்படுத்தியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகரில் அரசியல் கட்சி பேனர் ஒன்றில் கீழே விழுந்து ஒரு இளம் பெண் மரணத்தை சந்தித்தார் அதன் பின் பேனர் வைப்பதில் சில கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்தது. டிஜிட்டல் பேனர் வைக்கப்படும் பொழுது, எந்தப்பகுதியில் வைக்கிறார்களோ அந்த பகுதியில் நகராட்சி, காவல்துறை, வருவாய் அலுவலர்களிடம் சான்றிதழ் பெற்று அதன் பின்பே வைக்க வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளை எந்த அரசியல் கட்சிகளும் தனியார் அமைப்புகளும் பின்பற்றுவதே இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

Next Story

ராகுல்காந்திக்கு த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Congress leader Vijay congratulates Rahul Gandhi!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மோடி கடந்த 9ஆம் தேதி பதவியேற்றார். அதனை தொடர்ந்து 18வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (24-06-24) தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதனையடுத்து, நேற்று மாலை இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. மக்களவை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வானதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்தார். 

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்திக்கு, நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘காங்கிரஸ் கட்சியினராலும், அதன் கூட்டணி கட்சியினராலும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்திக்கு எனது வாழ்த்துகள். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துகள்.