Skip to main content

மீண்டும் கோர விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Repeat accident; Four members of the same family lost their lives

ஆந்திர மாநிலம் திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு பின் வீடு திரும்பிவர்களின் கார் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகி நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆந்திராவின் மற்றொரு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மேலும் 4 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் நல்லபெம்மன்பட்டியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் சத்யா, ராகேஷ், ராதாபிரியா, கோபி ஆகியோருடன் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் கொவ்வூரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது, கிருஷ்ணா மாவட்டம் பாபுலபாடு மண்டலம் கொடுருபாடு என்ற இடத்தில் அவர்கள் பயணித்த கார் லாரி மீது மோதியது.

Repeat accident; Four members of the same family lost their lives



இதில் ஏற்பட்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சுவாமிநாதன், ராகேஷ், ராதா பிரியா, கோபி ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். சாமிநாதனின் மனைவி சத்யா படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்