
தமிழ் சினிமாவில் ராஜ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர் ராமநாதன். சத்யராஜ் நாயகனாக நடித்த பிரம்மா, நடிகன், வீர பதக்கம், திருமதி பழனிசாமி, வாத்தியார் வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். மேலும் சத்யராஜின் மேலாளராக பணியாற்றியுள்ளார்.
சமீப காலமாக உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 72. மேலும் அவரது இறுதிச் சடங்குகள் நாளை மறுநாள் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைப் பிரபலங்கள் பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.