Published on 18/01/2025 | Edited on 18/01/2025
தமிழ் சினிமாவில் ‘மனிதன் சினி ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர் டி.எம். ஜெயமுருகன். மன்சூல் அலிகான் நடித்த சிந்து பாத் படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான இவர், ரோஜா மலரே படம் மூலம் இயக்குநராகவும் உருவெடுத்தார். பின்பு ‘அடடா என்ன அழகு’, ‘தீ இவன்’ ஆகிய படங்களை இயக்கியதோடு அதை தயாரித்து இசையமைக்கவும் செய்தார்.
கடந்த பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்த ஜெயமுருகன் தனது சொந்த ஊரான திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணம் திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.