Skip to main content

பவன் கல்யாண் பாடிய பாடல் வெளியானது

Published on 18/01/2025 | Edited on 18/01/2025
pawan kalyan song kekkanum guruve released

மெகா சூர்யா புரொடக்‌ஷன் தயாரிப்பில் ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவாகும் படம் ஹரி ஹர வீரமல்லு. இப்படம் முகலாயப்பேர்ரசர் காலத்தில் வாழ்ந்த அரசர் அவுரங்கசீப் பற்றிய புனைவுக்கதை ஆகும். நம் இந்திய வளங்களையும்  நிலப்பரப்புகளையும் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் நம் நாட்டிற்குள் படையெடுத்து வந்த டச்சுக்காரர்களயும் மற்றும் போர்த்துகீசியர்களையும்  எதிர்த்து சண்டையிட்டவர் இந்த  ஹரி ஹர வீரமல்லு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பாபி தியோல், சுனில், நிதி அகர்வால், மற்றும் நாசர் உட்பட பல நடிகர்கள் உள்ளனர்.  

இப்படத்தில் ‘கேக்கணும் குருவே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இதைஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பாடியுள்ளார். மற்ற மொழிகளிலும் கூட இவரது குரலே, மேம்பட்ட ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ள இப்பாடலின் தமிழ் பதிப்பிற்கு பா.விஜய் எழுதியுள்ளார். 

சார்ந்த செய்திகள்