Skip to main content

பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு - மருத்துவமனையில் அனுமதி

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Bombay Jayashri admitted in hospital

 

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ள பாம்பே ஜெயஸ்ரீ தற்போது பிரிட்டன் நாட்டிற்கு இசை கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள மருத்துவமனையில் இது தொடர்பாக சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. 

 

நேற்று இரவு கடுமையான கழுத்து வலி இருப்பதாக அங்கு இருப்பவர்களிடம் தெரிவித்துள்ளாராம். அதனால் அடுத்த நாளான இன்று அவரை பார்க்க சென்ற பொது அவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் திரையுலகினர் உள்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞராக வலம் வரும் பாம்பே ஜெயஸ்ரீ 120க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழில் இவர் பாடிய 'வசீகரா...' (மின்னலே), 'மலர்களே மலர்களே...' (புதுக்கோட்டையிலிருந்து சரவணன்), 'ஒன்றா ரெண்டா...(காக்க காக்க), ''யாரோ மனதிலே...' (தாம் தூம்) உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

12 வயது நவ்யா உமேஷ் பாடியுள்ள இறைவி பாடல்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
12 year old Navya Umesh sung iraivi album

சர்வதேச செஸ் ஒலிம்பியாட், குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட், கேலோ இந்தியா என குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மட்டுமல்லாது மாவீரன், ஜெயிலர், ஜவான் மற்றும் லால் சலாம் படங்களின் ஆடியோ லான்ச், எனப் பல நிகழ்வுகளை வெற்றிகரமாக நிகழ்த்திய கலை இயக்குநரும் நிகழ்வு மேலாளருமான உமேஷ் ஜே குமார் மற்றும் நிகழ்வு மேலாளர் ராகிணி முரளிதரன் ஆகியோரின் மகள் நவ்யா உமேஷ்.

ஏழாம் வகுப்பு படித்து வரக்கூடிய இவர், பாடி நடித்த ‘இறைவி’ பாடல் மகளிர் தின கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. வெங்கடேசன் இயக்கியுள்ள இப்பாடலை நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார். சமூக தொழில் முனைவோர் தீப்தி வரிகளை எழுதியுள்ளார். ‘என்ஜாய் எஞ்சாமி’ மற்றும் ‘கட்சி சேரா’ போன்ற வைரல் வீடியோக்களுக்கு நடனம் அமைத்த ‘தி டான்சர்ஸ் கிளப்’ இந்தப் பாடலுக்கான நடனம் அமைத்துள்ளனர். சோனி மியூசிக்கில் மகளிர் தினத்தன்று வெளியாகியுள்ள இந்தப் பாடலை, இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.

Next Story

பிரபல பாடகர் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
prime minister narendra modi condolence to Ghazal singer Pankaj Udhas passed away

பிரபல கஸல் பாடகர் பங்கஜ் உத்வாஸ் பாலிவுட்டில் பல படங்களுக்குப் பாடியுள்ளார். திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது 2006 ஆம் ஆண்டு வழங்கியது. குஜராத்தை சேர்ந்த அவர் சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், மருத்துவமனையில் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (26.02.2024) பங்கஜ் உத்வாஸ் (72) இறந்துள்ளார். இவரது மறைவு இசைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அஞ்சலி பதிவு பகிர்ந்து வருகின்றன. 

அந்த வகையில் பிரதமர் மோடி அவரது எக்ஸ் பக்கத்தில், “பங்கஜ் உத்வாஸின் இழப்பிற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். அவரது பாடல் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. அவரது கஸல்கள் ஆத்மாவுடன் நேரடியாக பேசுகின்றன. அவர் இந்திய இசையின் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தார். அவரின் மெல்லிசை பாடல்கள் தலைமுறைகளைத் தாண்டியது. பல ஆண்டுகள் அவருடனான எனது பல்வேறு உரையாடல்களை நினைவுகூர்ந்தேன். அவரது இடம் இசை உலகில் ஒருபோதும் நிரப்ப முடியாதது” எனக் குறிப்பிட்டுள்ளார்.