Published on 09/05/2025 | Edited on 09/05/2025

நடிகையும் பா.ஜ.க. எம்.பி-யுமான கங்கனா ரனாவத், சினிமா பொறுத்தவரை கடைசியாக எமர்ஜென்சி படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்போது மாதவனுடன் இன்னும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனது அரசியல் பணியையும் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் கங்கனா ரனாவத் ஹாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ‘பிளெஸ்டு பீ தீ ஈவில்’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நடிகர்கள் டைலர் போஸி மற்றும் ஸ்கார்லெட் ரோஸ் ஸ்டலோன் ஆகியோருடன் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே பாலிவுட் நடிகைகளில் ஷபானா ஆஸ்மி, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, ஆலியா பட் உள்ளிட்டோர் ஹாலிவுட்டில் நடித்த நிலையில் தற்போது கங்கனா ரனாவத்தும் இணையவுள்ளதாக தெரிகிறது.