Skip to main content

'பல்லு படாம பாத்துக்க' பட டைட்டில் காரணம் இதுதான்' - இசையமைப்பாளர் ஓபன் டாக்

Published on 22/06/2018 | Edited on 23/06/2018
balamurali

 

'பீச்சாங்கை' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான பாலமுரளி பாலு அடுத்ததாக 'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படங்கள் மூலம் பிரபலமானார். அடுத்தடுத்து வித்யாசமான படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் இசையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'டிராபிக் ராமசாமி' படம் இன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து இவர் அடுத்ததாக 'கஜினிகாந்த்', 'பல்லு படாம பாத்துக்க', 'தட்றோம் தூக்குறோம்' ஆகிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தன் அடுத்தடுத்த படங்களை பற்றியும், தற்போது இசையமைத்திருக்கும் டிராபிக் ராமசாமி படத்தை பற்றியும் பாலமுரளி பாலு நம்முடன் பேசும்போது.... 

 

 


"நான் இசையமைத்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தாண்டி அதில் இடம்பெற்ற 'அழுக்கு ஜட்டி அமுதவள்ளி' பாடலால் எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது. யு டியூபில் இந்த பாடலுக்கு அமுதவள்ளி என்ற பெண் 'என் பெயர் அமுத வள்ளி. நீங்கள் இந்த பாடலை போட்டதனால் நண்பர்கள் அனைவரும் என்னை கிண்டல் செய்கின்றனர். எனக்கு ஒரு அழுகையாக வருகிறது' என்று கமண்ட் செய்திருந்தார். அதை பார்த்தவுடன் எனக்கு ரொம்ப வருத்தமாகிவிட்டது.

பின்னர் அந்த பெண்ணிடம் வேறு ஒரு ஐடியில் இருந்து தொடர்பு கொண்டு சமாதானம் படுத்தினேன். அதிலிருந்து இனி பொறுப்புடன் பாடல்கள் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. ஒரு 85 வயது முதியவர் இந்த வயதில் இவ்வுளவு செய்யும்போது நாம் நம் வாழ்வில் என்ன செய்தோம் என்று தோன்றியதை சவாலாக எடுத்துக்கொண்டு நான் இசையமைத்த படம் 'டிராபிக் ராமசாமி'. படத்தில் வரும் உணர்ச்சிகரமான பாடல்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

 

 


நான் அடுத்து இசையமைத்திருக்கும் 'கஜினிகாந்த்' படம் குடும்பத்துடன் சென்று பார்க்கும் யு சான்றிதழ் படமாக இருக்கும். ராகங்களை முன்னிறுத்தி வரும் பாடல்கள் இப்போது அபூர்வமாக உள்ளதால், இப்படத்தில் 'ஸ்ரீ ராகம்' என்ற ராகத்தில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளேன். மேலும் இந்த பாடல் உட்பட மொத்தம் மூன்று பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். இதையடுத்து நான் 'பல்லு படாம பாத்துக்க' படத்திற்கு இசையமைத்துள்ளேன். இது ஒரு  'சோம்பி' வகை காமெடி படம். படத்தின் டைட்டிலான 'பல்லு படாம பாத்துக்க' என்பது சோம்பிவுடைய பல் நம் மேல் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். அப்படி சோம்பி பல் நம் மேல் பட்டால் நாமும் சோம்பி ஆகிவிடுவோம் என்பதனால் இப்படத்திற்கு இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

 

 


இதுவரை நான் இயக்குனர்களுக்கு ஏற்றவாறு பாடல்கள் கொடுத்தேன். இந்த படத்தின் இசை அப்படி இல்லாமல் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும். படத்தில் பேய்களின் சத்தத்தை வைத்து ஒரு பாடலும், ஜாஸ் கலந்த டப்பாங்குத்து பாடலும், ஒரு வித்தியாசமான குத்து பாடலும் உள்ளது. இதைத்தொடர்ந்து நான் புதுமுகங்கள் நடிக்கும் 'தட்றோம் தூக்குறோம்' படத்திற்கும் இசையமைத்து வருகிறேன்" என்று மனம் திறந்து பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்