Skip to main content

விறுவிறுப்பாக நடைபெற்ற கூடைப்பந்து போட்டி; கடும் மழையிலும் நகராத ரசிகர்கள்

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
third day of the 64th All India Basketball Tournament at Karur

கரூரில் மூன்றாவது நாளாக 64ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்றது. இதில்  வெற்றி புள்ளிகளை அடைய விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் விளையாடினர்.

கரூர் மாவட்ட கூடைப்பந்து கிளப் மற்றும் 64 ஆவது எல்.ஆர்.ஜி நாயுடு நினைவு ஆண்கள் கூடைப்பந்து போட்டி மற்றும் 10வது கரூர் வைசியா வங்கி கோப்பைக்காண பெண்கள் கூடைப்பந்து போட்டி கரூர் நகர பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் மைதானத்தில் மே 22 ஆம் தேதி துவங்கியது. இந்தப் போட்டியில், ஆண்கள் போட்டியில் 8 அணிகளும், பெண்கள் போட்டியில் 4 அணிகளும் விளையாடுகின்றன.

ஆண்கள் போட்டியில் சிஆர்பிஎஃப் புதுடெல்லி அணி சென்ட்ரல், செகேட்ரியேட் புதுடெல்லி அணியுடன் விளையாடியது. இதில்  சென்ட்ரல்  செகேட்ரியேட் புதுடெல்லி அணி 59 புள்ளிகள் பெற்றது. சிஆர்பிஎஃப் புதுடெல்லி அணி 30 புள்ளிகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது. அடுத்து நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் ஏர் ப்ரோஸ் புதுடெல்லி அணி 72 புள்ளிகள் பெற்று அதனை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியன் நேவி லோனவில்லா அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.

இதே போல கேவிபி பெண்கள் கூடைப்பந்து கோப்பை காண போட்டியில் மும்பை சென்ட்ரல் ரயில்வே அணி 57 புள்ளிகள் பெற்று மும்பை வெஸ்டர்ன் ரயில்வே அணியை 50 புள்ளிகள் மட்டுமே பெறசெய்து தோற்கடித்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற கூடைப்பந்து ஆட்டத்தை கொட்டும் மழையை பொறுப்பெடுத்தாமல் கூடைப்பந்து ரசிகர்கள் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியே கண்டு ரசித்தனர் இந்தியன் நேவி லோனவில்லா அணியைத் தோற்கடித்து வெற்றி பெற்றது.

இதே போல கேவிபி பெண்கள் கூடைப்பந்து கோப்பைக்கான போட்டியில் மும்பை சென்ட்ரல் ரயில்வே அணி 57 புள்ளிகள் பெற்று மும்பை வெஸ்டர்ன் ரயில்வே அணியை 50 புள்ளிகள் மட்டுமே பெறச்செய்து தோற்கடித்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற கூடைப்பந்து ஆட்டத்தைக் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் கூடைப்பந்து ரசிகர்கள் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்ற அகில இந்தியக் கூடைப்பந்து போட்டியே கண்டு ரசித்தனர்

சார்ந்த செய்திகள்