Published on 07/05/2025 | Edited on 07/05/2025

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ரோகித் சர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வுபெற இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் இனி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாட இருப்பதாக தெரிவித்துள்ள ரோகித் சர்மா, தனக்கு ஆதரவளித்து வந்த ரசிகர்கள் அனைவர்களுக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவின் இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.