Skip to main content

சாதனைப் பட்டியலில் இணைந்த தேவ்தத் படிக்கல்!

 

Devdutt Padikkal

 

 

இந்திய அணியில் அறிமுகமாகாமல் ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் 400 ரன்கள் அடித்த வீரர்கள் என்ற பட்டியலில் தேவ்தத் படிக்கல் இணைந்துள்ளார்.

 

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பெங்களூரு அணியைச் சேர்ந்த 20 வயது நிரம்பிய தேவ்தத் படிக்கல், பெங்களூரு அணி விளையாடியுள்ள 12 போட்டிகளிலும் களமிறங்கி 4 அரை சதங்களுடன் 417 ரன்கள் குவித்துள்ளார். தேவ்தத் படிக்கல், இந்திய அணிக்கு அறிமுகமாகாமல் இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது இந்தியவீரர் ஆவார். 

 

2015-ம் ஆண்டு டெல்லி டேர்வில்ஸ் அணிக்காக விளையாடிய போது ஷ்ரேயாஸ் ஐயர், இச்சாதனையை முன்னர் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்