Skip to main content

கோலியின் மற்றொரு சாதனையையும் அடித்து நொறுக்கிய பாகிஸ்தான் வீரர்...

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

உலகக்கோப்பையில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகள் மோதின.

 

babar azam breaks kohli's record of scoring 3000 runs in least innings

 

 

இதில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்து. இதனையடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் 101 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் இவர் 29 ரன்களை கடந்த போது ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 3000 ரன்களை கடந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 68 போட்டிகளில் 3000 ரன்களை கடந்து கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

கோலி 75 போட்டிகளில் 3000 ரன்களை கடந்து, அதிவேகமாக 3000 ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஆம்லாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருந்தார். தற்போது அந்த சாதனையை பாபர் ஆசாம் முறியடித்து அந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்னே 1000 மற்றும் 2000 ரன்களை கடந்த கோலியின் சாதனையும் பாபர் அசாம் முறியடித்துள்ளார்.