Skip to main content

வங்கதேசத்தை துவம்சம் செய்து ரன்கள் குவித்த இங்கிலாந்து!

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

வெ.அருண்குமார் 

 

7th League Match of the World Cup

 

வங்க தேசம் மற்றும் இங்கிலாந்து இடையே தரம்சாலாவில் உலகக் கோப்பையின் 7 ஆவது லீக் ஆட்டம் காலை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, வங்க தேச வீரர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்து ரன்கள் குவித்தது.

 

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மாலன், பேர்ஸ்டோ இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரைசதம் கடந்த நிலையில், பேர்ஸ்டோ 52 ரன்கள் எடுத்து ஷகிப் பந்து வீச்சில் ஆட்டம் இழக்க, அடுத்து மாலனுடன் ஜோ ரூட் இணைந்தார். ரூட் அவ்வப்போது அதிரடி காட்ட, மாலனோ வங்க தேச பந்து வீச்சை நாலா பக்கமும் சிதறடித்து ரன்கள் குவித்தார். சிறப்பாக ஆடி சதம் கடந்த மாலன்,  16 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் உட்பட 140 ரன்கள் குவித்து மெஹெதி ஹசன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

 

அடுத்து வந்த பட்லர் 20, ப்ரூக் 20, சாம் கரன் 11, வோக்ஸ் 14 என சொற்ப ரன்களில் வெளியேற,  ஜோ ரூட் மட்டும் அரைசதம் அடித்து 82 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. வங்க தேச தரப்பில் மெஹெதி ஹசன் 4 விக்கெட்டுகளும், இஸ்லாம் 3 விக்கெட்டுகளும், ஷகிப் மற்றும் அஹமத் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்க தேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. தொடக்க ஆட்டக் காரர் டன்சித் ஹசன் 1 ரன்னிலும், ஷான்டோ ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் ஷகிப் 1 ரன்னிலும் , மிராஜ் 8 ரன்னிலும் வெளியேற 49/4 என்று தடுமாறி ஆடி வருகிறது.

 

 

 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.