Skip to main content

12 ஆயிரம் மக்களை பரிதவிக்க வைத்த ஒற்றை நத்தை... உலகையே ஆச்சரியப்பட வைத்த வினோத சம்பவம்...

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

கடந்த மே 30ம் தேதி மின்சார கோளாறு காரணமாக ஜப்பான் நாடு முழுவதும் முக்கியமான 25 புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. ஜப்பான் வரலாற்றிலேயே இதுவரை நடக்காத சம்பவமாக இது உலக மக்களால் பார்க்கப்பட்டது.

 

small snail stops 25 bullet trains in japan

 

 

நிலநடுக்கம்,கன மழை என எந்த காரணத்தினாலும் நிற்காமல், தாமதம் ஆகாமல் இயங்கும் ஜப்பான் ரயில்களை நிறுத்தியது ஒரு சிறிய நத்தை என தற்போது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 30ம் தேதி தெற்கு ஜப்பானில், புல்லட் ரயில்கள் வழித்தடத்தில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக 25 புல்லட் ரயில்களின் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

இதற்கான காரணம் குறித்து விசாரிக்க ஆரம்பித்த புல்லட் ரயில் ஊழியர்கள், ரயில் பாதைக்கு தொடர்புடைய எலக்ட்ரானிக் கருவியில் உயிரிழந்த நிலையில் நத்தை ஒன்றை மீட்டுள்ளனர். அதன் பின்னரே 25 ரயில்களை இயக்க முடியாமல் போனதற்கு அந்த நத்தை தான் காரணம் என தெரிய வந்துள்ளது.

கட்டுப்பட்டு அறையில் உள்ள எலக்ட்ரானிக் கருவியை கடக்க முயன்ற போது, நத்தை மீது மின்சாரம் பாய்ந்து, அதனால் ஷாட் சர்கியூட் ஆனதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இயற்கை பேரிடர்களாலேயே நிறுத்த முடியாத ஜப்பான் ரயில்களை ஒரு நத்தை ஒரு நாள் முழுவதும் முடங்கியுள்ளது உலகம் முழுவதும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Powerful earthquake in Japan

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. சுமார் 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கின. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி  இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  படுகாயம் அடைந்த 800க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் முன்னெச்சரிக்கையாக இந்தோனேசியா மற்றூம் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகின. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளொகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. 

Next Story

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Powerful earthquake in Taiwan; Tsunami warning in Japan

தைவானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கி உள்ளன. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.