கம்போடிய நாட்டை சேர்ந்த அன் லின் டச் மற்றும் அவரது கணவர் பௌன் ராட்டி இணைந்து ஒரு யூடீயூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தனர். இதில் எதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்பதர்காக அவர்களின் வீட்டிற்கு அருகில் மார்க்கெட்டிற்கு சென்று அங்கு பாம்பு வகைகள், பறவைகள், விலங்குகளை வாங்கி அனைத்தையும் கொன்று சமைத்து உண்ணுகின்ற வீடியோவினை யூடீயூப் சேனலில் பதிவிட்டு வருமானம் ஈட்டிவந்தனர்.
இதனை பார்த்த சூற்றுசூழல் அமைச்சகம் இந்த தம்பதியை கைது செய்து விசாரணை நடத்திவருகிறது. இந்த விசாரணையின் போது அந்தத்தம்பதி கூறியது. " இந்த யூடீயூப் சேனலை கடந்த டிசம்பர் மாதம்தான் தொடங்கினோம். நாங்கள் இந்த விலங்குகளை மார்க்கெட்டில் வாங்கித்தான் சமைத்து உண்டு வீடியோவாக பதிவிட்டோம்.
இதுபோன்ற வன விலங்குகளை கொன்று உண்ணக்கூடாது என்று சத்தியமாக எங்களுக்கு தெரியாது. இதன் மூலம் நாங்கள் 500 டாலர்கள் வரை சம்பாதித்தோம்" என்று கூறினர். இந்த தம்பதிகள் குறித்து சுற்றுசூழல் அமைச்சகத்தின் பொது செயலாளர் கூறியது. வனவிலங்குகளை இவ்வாறு கொன்று சமைத்து உண்பது என்பது தண்டனைக்குரிய செயல். தற்போது இவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றோம் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். மேலும் வனவிலங்குகளை சட்ட விரோதமாக வாங்கி விற்பவர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறினார்.