Skip to main content

சரிந்து விழுந்த கட்டிடம்; 11 மாத கைக்குழந்தையை காப்பாற்ற 35 மணிநேர மீட்பு போராட்டம்...

Published on 03/01/2019 | Edited on 03/01/2019

 

sdfsz

 

ரஷ்யாவின் உள்ள மங்னிட்டோகோர்ஸ் நகரில் உள்ள 48 அடுக்குகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்தது. கட்டிடத்தில் ஏற்பட்ட விபத்தில் கட்டிடத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதி சரிந்தது. இந்த இடிபாடுகளில் 11 மாதங்களான ஆண் குழந்தை ஒன்று சிக்கிக்கொண்டது. இந்த நிலையில் குழந்தையை மீட்கும் பணியில் மீட்புப் பணி அதிகாரிகள் ஈடுபட்டனர். மைனஸ் 2 டிகிரி என்ற கடும் குளிரில் நடத்தப்பட்ட இந்தத் தேடுதல் வேட்டையில் 35 மணிநேரங்களுக்குப் பின்னர் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

இதுகுறித்து ரஷ்ய சிறப்பு படையினர் கூறுகையில், 'இது ஒரு அதிசயமான நிகழ்வு. மீட்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அக்குழந்தையின் தாயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் கட்டிட விபத்தில் இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 22 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன' என கூறினர். மேலும் மீட்கப்பட்ட குழந்தை பிங்க் நிறத்தில் சாக்ஸ் அணிந்திருந்ததாகவும், குழந்தைக்கு ஆபத்தான வகையில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து குழந்தையை மீட்ட மீட்புப் பணி வீரர்களுக்கு பொதுமக்கள் மற்றும் ரஷ்ய ஊடகங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்