Skip to main content

காந்தியின் கையெழுத்திட்ட புகைப்படத்திற்கு அமெரிக்காவில் அதிக மவுசு!

Published on 09/03/2018 | Edited on 09/03/2018

காந்தியின் கையெழுத்திட்ட புகைப்படம் அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.27 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

 

Gandhi

 

இந்தியாவில் அரசியல் சாசன சீர்திருத்தங்கள் மற்றும் சுதந்திரம் கோருவதற்கான வட்டமேசை மாநாடு 1930 முதல் 1932 வரை லண்டனில் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் 1931ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது அமர்வில் மகாத்மா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த மதன்மோகன் மால்வியா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு இந்த இருவரும் வெளியே நடந்துவருவது மாதிரியான இந்த புகைப்படத்தில், எம்.கே.காந்தி என மகாத்மா காந்தி கையெழுத்திட்டுள்ளார்.

 

இந்தப் புகைப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், தனது கட்டை விரல் காரணமாக மகாத்மா காந்தி இடதுகைப் பழக்கத்திற்கு மாறியிருந்த சமயத்தில் கையெழுத்திடப்பட்ட புகைப்படம் என்பதாகும். ‘20ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த மகாத்மா காந்திக்கு இவ்வளவு மவுசு இந்தக் காலகட்டத்திலும் இருப்பதில் ஆச்சர்யப்பட எதுவுமில்லை’ என ஏலம் நடத்தியவர் தெரிவித்துள்ளார்.

 

இந்த ஏல நிகழ்வில் கார்ல் மார்க்ஸ் எழுதிய ’ரெவிலேஷன்’ கடிதங்களின் நகல்கள், எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய அறிவுரைக் கடிதம் போன்றவையும் நல்ல விலைக்கு ஏலம் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சார்ந்த செய்திகள்