Skip to main content

வெளிநாட்டினருடன் உறவு வைத்து கொள்ளாதீர் - ரஷ்ய பெண் எம்.பி

Published on 14/06/2018 | Edited on 15/06/2018

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கௌவில் 21 வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆரம்பமாக நடக்கவிருக்கிறது. இந்த உலகக்கோப்பை கால்பந்தாட்டம் 300 கோடி பேரால் பார்க்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்காக 10 லட்சம் வெளிநாட்டவர்கள் ரஷ்யாவுக்கு வருவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் எந்த வம்பும் வைத்துக்கொள்ள கூடாது. நம் ஊர் மானத்தை காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஆனால் ரஸ்யாவைச் சேர்ந்த பெண் எம்.பி வேறு மாதிரி சொல்லியிருக்கிறார்.

 

fifa

 

1980 ஆம் ஆண்டு ரஷ்யாவில் தற்போது நடக்கும் உலகக்கோப்பை போலவே பல பொருளாதார செலவுகள் எல்லாம் செய்து ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது. அப்போது வெளிநாட்டில் இருந்து வந்த பார்வையாளர்களுக்கும் ரஷ்ய பெண்கள் பலருக்கும் காதல் மலர்ந்தது. ஒலிம்பிக் நடைபெறும் வரை காதல் மலர்ந்தவர்கள் பலர் டேட்டிங்கில் ஈடுபட்டனர். ஒலிம்பிக் முடிந்தவுடன் வந்தவர்கள் எல்லாம் அவரவர் ஊரை பார்க்க சென்றுவிட்டனர். டேட்டிங்கில் ஈடுபட்டவர்கள் பலர் கருதரித்தனர். இதனால் சிங்கிள் மதர்களாக பல ரஷ்ய இளம்பெண்கள் மாறினர். சிலர் குழந்தைகளை வளர்க்க முடியாமல் அனாதைகளாக சாலைகளில் விட்டுச் சென்றுள்ளனர். இப்படி நடந்த வரலாற்று சம்பவத்தை காரணமாக சொல்லி, தற்போது நடக்கும் உலககோப்பைக்கும் முடிச்சுப்போட்டு பேசியிருக்கிறார் இந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்பி டமாரா பிளேன்டினெவ்.

 

fifa

 

கோவொரித் மாஸ்க்கோவ் என்ற ரேடியோ ஸ்டேஷனில் பேட்டி கொடுத்திருந்த டமாரா கூறியதாவது, " ஒலிம்பிக் நடைபெற்ற சமயத்தில் ஆப்ரிக்கா, லிதியா, அமெரிக்கா மற்றும் ஆசியா இன கலப்பில் பல குழந்தைகள் ரஷ்யாவில் பிறந்தன. இதனால பல குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையிலும், சிங்கிள் மதர்களாகவும் வாழ்ந்துவந்தனர்" என்றார். விளாதிமிர் புதின் ஒருமுறை, ரஷ்யாவில் கால்பந்து போட்டி நடைபெற இருப்பதால் குழந்தைகளின் சதவீதம் அதிகரிக்க கூடும் என்று சொன்னதை வைத்து கேட்கப்பட்ட கேள்விக்கு டமாரா, "  குழந்தைகளின் சதவீதம் உயரட்டும் அது நம்மின குழந்தைகளாக இருக்க வேண்டும்" என்றார். இவரின் பேச்சு பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இப்படிலாமா அட்வைஸ் பண்ணுவாங்க.... 

சார்ந்த செய்திகள்