Skip to main content

சீனாவின் புதிய லேசர் துப்பாக்கி!!!

Published on 04/07/2018 | Edited on 04/07/2018

அரை மைல் தூரத்துக்கு அப்பால் நின்று கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் திடீரென வெடித்து சிதறியது.

 

china


 

 

 

அரசு எதிர்ப்பு பேனர்களுடன் ஒரு போராட்ட ஊர்வலம் அரை மைல் தூரத்துக்கு அப்பால் வந்துகொண்டிருந்தது. திடீரென அந்த பேனர்களில் தீப்பற்றியது. தலைமை வகித்து வந்தவரின் சட்டை தீப்பற்றியது. அடுத்தடுத்து சிலருடைய சட்டைகளிலும், தலைமுடியிலும் தீப்பற்றியது.

 

எல்லாவற்றுக்கும் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லேசர் துப்பாக்கிதான் காரணம். ஸ்டார் வார்ஸ் படத்தில் இந்த லேசர் துப்பாக்கிகளை பார்த்திருப்பீர்கள். அறிவியல் கற்பனை படத்தில் கற்பனையாக காட்டப்பட்ட அந்தத் துப்பாக்கியை சீனா ஆராய்ச்சியாளர்கள் நிஜத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.

 

இந்தத் துப்பாக்கியால் 800 மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கைத் தாக்க முடியும் என்கிறது சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகை. இந்தத் துப்பாக்கிக்கு zkzm-500 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்போது புழக்கத்தில் உள்ள ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் போல இது 3 கிலோ எடையுடன் இருக்கும். துப்பாக்கியிலிருந்து ஆயிரம் லேசர் ஷாட்டுகள் வெளியிட முடியும். ஒரு ஷாட்டுக்கும் இன்னொரு ஷாட்டுக்கும் இடையே 2 வினாடி அவகாசம் இருக்கும் என்கிறார்கள்.

 

 

 

இந்தத் துப்பாக்கிக்கு செல்போன் பேட்டரியைப் போன்ற பேட்டரிகளில் இருந்து சக்தி கிடைக்கும். ஆட்களைக் கொல்வதற்காக இந்தத் துப்பாக்கியை பயன்படுத்த மாட்டோம் என்பதில் சீனா உறுதியாக இருக்கிறது. வெடிக்கும் பொருட்களை தூரத்திலிருந்து வெடிக்கச் செய்யும் என்றும், எதிராளிகளின் முடி மற்றும் உடைகளில் தீப்பற்றச் செய்யும் என்றும் தோலில் கொப்புளம் போன்ற போன்ற பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றும் கூறுகிறார்கள்.

 

இந்தத் துப்பாக்கியை உற்பத்தி செய்ய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. பெரிய அளவில் உற்பத்தி தொடங்கினால் ஒரு துப்பாக்கியின் விலை 15 ஆயிரம் டாலராக இருக்கும். அதாவது இந்திய ரூபாயில் 9 லட்சம் ரூபாய்.

 

சீன ராணுவத்தினர் மற்றும் போலீஸாருக்கு மட்டுமே இந்தத் துப்பாக்கி கிடைக்குமாம்.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்