Skip to main content

லைசென்ஸில் கார்ட்டூன் பாத்திரம், அதிர்ச்சியில் போலீசார்!

Published on 31/03/2018 | Edited on 31/03/2018
LICENSE PHOTO HOMER SIMPSOM


இங்கிலாந்து நாட்டில் மில்டன் கெயின்ஸ் நகர போலீசார் சமீபத்தில் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிந்த செய்தி நகைச்சுவையாய் இருந்தது. அந்தப் பதிவின்படி  நந்தினி சின்ஹா என்பவரிடம் வாகன உரிமத்தை வாங்கி பரிசோதனை செய்த பொழுது அதிலிருந்த   பெயரும், புகைப்படமும் அவர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள மில்டன் கெயின்ஸ் நகரில் போலீசார் அன்று சிக்னலில் நிற்காமல் சென்ற நந்தினி சின்ஹா என்பவரை பின்தொடர்ந்து அவரின் வாகன உரிமத்தை வாங்கிப் பார்த்த பொழுது போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் அதில் நந்தினி சின்ஹாவின் பெயரோ, புகைப்படமோ, முகவரியோ, பிறந்த தேதியோ இல்லை. அதற்கு பதிலாக குழந்தைகள் ரசித்துப் பார்க்கும் கார்டூன் கதாபாத்திரமான "ஹோமர் சிம்ப்சன்" புகைப்படம், அதன் பெயரிலே கையொப்பம் என அனைத்தும் இருந்தது. அதனால் போலீசார் நந்தினி சின்ஹாவை கைதுசெய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து மில்டன் கெயின்ஸ் போலீசார் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் "ஓட்டுனரின் கார் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் முறையான வாகன ஓட்டுனர் உரிமம் இல்லை, இது தான் இருந்தது" என்று குறிப்பிட்டு புகைப்படத்தை பதிவு செய்திருந்தனர்.

சார்ந்த செய்திகள்