/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/twittern.jpg)
பிரபல சமூக வலைதளமான ட்விட்டர், 2006ல் ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகியோரால் துவங்கப்பட்டது. அப்போது, நிறுவனத்தின் லோகோ எனப்படும் சின்னமாக பறவையை தேர்ந்தெடுத்தனர். அதன்பின், 2012ல் லோகோ மேலும் நவீனமயமாக்கப்பட்டு, ஒற்றை நீல பறவையாக மாற்றப்பட்டது.
அதன் பின்னர், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க், ட்விட்டரைக் கடந்த 2023 ஆண்டு தன்வசப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். ட்விட்டர் நிறுவனத்தின், சி.இ.ஓ பதவிக்கு ஒரு நாயை அமர்த்தி எலான் மஸ்க் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, காலங்காலமாக இருந்த ட்விட்டர் தளத்தின் லோகோவான ‘நீலக் குருவி’யை கருமை நிறத்தில் ஆங்கில எழுத்தான எக்ஸ் (x) என்ற வடிவில் லோகோவை மாற்றப்பட்டது. அதன் பின்னர், ட்விட்டருக்கு ‘எக்ஸ்’ என மறுபெயரிட்டப்பட்டது.
இந்த நிலையில், ட்விட்டர் லோகாவாக இருந்த ‘நீலக் குருவி’ பறவை தற்போது ஏலம் போயுள்ளது. அரிய பொருட்களை ஏலம் விடும் ஆர்.ஆர். ஏல நிறுவனம், 254 கிலோ எடை, 12 அடி நீளம், 9 அடி அகலம் கொண்ட டுவிட்டர் பறவை சின்ன போர்டு, ரூ. 30 லட்சம் ஏலம் போனதாக அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)