Skip to main content

'மூன்று மாதம்... 200 மூட்டை மணல்' சுரங்கம் அமைத்து சிறையில் இருந்து தப்பிய கைதிகள்!

Published on 21/01/2020 | Edited on 22/01/2020

சிறையில் சுரங்கம் அமைத்து 75 கைதிகள் தப்பிய சம்பவம் பராகுவே நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பாராகுவே நாட்டில் கபேரிகோ பகுதியில் மிக பெரிய சிறைச்சாலை உள்ளது. மிகவும் பாதுகாப்பான சிறைசாலைகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்த சிறைசாலையில் தற்போது கைதிகள் சுரங்கம் அமைத்து தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



பல்வேறு கொலை, கொள்ளை வழங்குகளில் தொடர்புடைய 75 பேர் அந்த சிறைசாலையில் இருந்து சுரங்கத்தின் வழியாக தப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதற்காக மாதக்கணக்கில் கைதிகள் சுரங்கம் தோண்டியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. சுமார் 200 மூட்டை அளவுக்கு மண் தோண்டப்பட்டு அதை சாக்கு பைகளில் கைதிகள் நிரப்பியுள்ளதும் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்கள் இந்த சுரங்கத்தை கைதிகள் தோண்டியுள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்