Skip to main content

“மத்திய அரசு ஏன் அனுமதி அளிக்கவில்லை?”- டி.ஆர்.பாலு கேள்வி!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

Why the Central Government did not give permission?

 

டெல்லியில் தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தமிழக எம்.பி., டி.ஆா்.பாலு பேசினார்.  அதில், “ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் சரக்கு பெட்டகங்களை நாம் வௌிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்கிறோம். உள்நாட்டிலேயே அதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது ஏன் வெளிநாடுகளில் இதை வாங்க வேண்டும்?

 

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையிலேயே சரக்கு பெட்டிகளை உற்பத்தி செய்ய, போதுமான வசதிகள் உள்ள நிலையில் மத்திய அரசு ஏன் அனுமதி அளிக்கவில்லை? அதே போல தண்டவாளம் உற்பத்தி செய்யவும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். சரக்கு ரயில் பெட்டகங்கள் டெண்டரில் பொன்மலை பணிமனை கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு இதனைத் தீவிரமாகப் பரிசீலிக்கக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் பேசினார்.

 

 


 

சார்ந்த செய்திகள்