/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a71137.jpg)
போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். தொடர்ந்து பலமுறை நீதிமன்றங்களை நாடியும் அவருக்கு ஜாமீன் கிடைக்காத நிலை தொடர்ந்து வருகிறது.
அமலாக்கத்துறையின் வழக்கில் இருந்து ஜாமீன் கோரியமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்த நிலையில் இந்த வழக்கின்சூழலை மாதம்உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இன்று நடந்த விசாரணையில் தங்கள் தரப்பு வழக்கறிஞர் வேறொரு வழக்கில் வாதிட்டு வருவதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் எனஅமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/A761_9.jpg)
இதனை செந்தில் பாலாஜி தரப்பு எதிர்த்தது. வழக்கை ஒத்திவைக்க கூடாது, 320 நாட்களுக்கு மேலாக அவர் சிறையில் இருக்கிறார். எனவே வழக்கை நாளைய தினமாவது விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையைஉச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். காரணம் அமலாக்கதுறையின் வாதங்களை கேட்காமல் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவதோ அல்லது அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக உத்தரவுகளை கொடுப்பதோ செய்ய முடியாது. எனவே ஜூலை 10 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைக்கிறோம்என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தற்பொழுது வரும் வாரத்தில் இருந்து கோடை விடுமுறை இருப்பதால் அதன் காரணமாக ஜூலை 10ஆம் தேதி கோடை விடுமுறை முடிந்து வந்தவுடன் முதல் வாரத்தில் மீண்டும் இந்த ஜாமீன் வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தள்ளுபடி, ஒத்திவைப்பு, காவல் நீட்டிப்பு என கலக்கம் கண்டுள்ளது செந்தில் பாலாஜிதரப்பு என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)