Skip to main content

“சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும்; முதல்வருக்கு அழுத்தம் கொடுக்க பேரணி'' - தவாக வேல்முருகன் பேட்டி

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

 "We need a caste-wise census; Rally to put pressure on the Chief Minister" -Velmurugan interview

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசுகையில், ''தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பெப்சி தொழிலாளர்களுக்கும், உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுத்து அவர்கள் பொருளீட்டுகின்ற வகையில் தமிழ்நாட்டினுடைய முன்னணி கதாநாயகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருந்தாலும், விஜய்யாக இருந்தாலும், அஜித்தாக இருந்தாலும் எந்த முன்னணி நடிகர்களாக இருந்தாலும் தமிழ்நாட்டு தொழிலாளர்களை வாழ வைக்கின்ற வகையில் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்தி அவர்களுடைய குடும்பங்களை வாழ வைப்பதற்கு முன்வர வேண்டும்.

 

சட்டமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று நான் வலியுறுத்திப் பேசி இருக்கிறேன். அது போன்று வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சமூக நீதியை வழங்குவதற்கு காலதாமதம் ஆகும் என்று சொன்னால், உடனடியாக 10.5% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியதைப் போல் இனி அதைத் தள்ளுபடி செய்யாத வண்ணம் உரிய ஆவணங்களோடு சட்டம் இயற்றுங்கள் என்ற கோரிக்கையும் சட்டமன்றத்தில் வைத்துள்ளேன். இந்த இரண்டு கோரிக்கைகளும் கோரிக்கையாகவே இருக்கிறது. அதனால்தான் முதலமைச்சருக்கு ஒரு அழுத்தத்தைத் தருகின்ற வகையில் சாதி, மதம் கடந்து சமூக நீதி அனைத்து மக்களுக்கும் வேண்டும் என்கின்ற சமூக நீதிக் கோட்பாட்டின் தத்துவத்தின் அடிப்படையில் கோட்டையை நோக்கி மாபெரும் கோரிக்கை பேரணி எதிர்வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கின்ற நேரத்தில் நடத்த இருக்கிறோம்.

 

ஆளுநர் எந்த ஒரு சட்டம் இயற்றினாலும் அனுமதி தர மறுக்கின்றார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மாநில அரசால் மட்டும் முடியாது இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட ஒன்று. ஆகவே ஒன்றிய அரசிடமும் அனுமதி பெற வேண்டும். ஒன்றிய அரசும் மாநில அரசும் சேர்ந்து நடத்தப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் மாநில அரசே நடத்தும் என பீகார் முதல்வர் தெரிவித்துள்ளார். முன்பு பாண்டிச்சேரியில் முதல்வராக இருந்தவர்கள் இது போன்ற அறிவிப்பை வெளியிடப்பட்டிருக்கிறார்கள். அதுபோன்ற ஒரு அறிவிப்பினை மாநில முதல்வர் வெளியிட வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்காகத்தான் இந்தப் பேரணி'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார்.