Skip to main content

டிடிவியும் எடப்பாடியும் இணையப்போகிறார்கள்;மதுரை ஆதீனத்தின் ஏக்கமும்;டிடிவியின் மறுப்பும்

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

டிடிவி தினகரன் அணிக்கும் அ.தி.மு.க.வுக்கும் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் டிடிவி.தினகரன் மற்றும் அவர் அணியில் இருப்பவர்கள் அனைவரும் அதிமுகவில் இணைவார்கள்," ஜோதிடம் கணித்தவர் போலவே  பேட்டியளித்துள்ளார் மதுரை ஆதீனம்.

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே  உள்ள திருப்புறம்பியத்தில் மதுரை ஆதினத்திற்கு சொந்த சாட்சிநாதர் ஸ்வாமி ஆலயம் உள்ளது. அங்கு வந்திருந்த  292 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ.அருணகிரிநாத தேசிக பரமாச்சார்ய சுவாமிகளான மதுரை ஆதீனம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

 

TTV and edappadi joining together;Nostalgia of madurai adinam;ttv  Disclaimer

 

எப்போதுமே ஆன்மீகத்திற்கு அப்பால்,  இந்திய, தமிழக அரசியலை பேசிபரபரப்பை உண்டாக்குவது  மதுரை ஆதீனத்தின் வேலையாக இருக்கும்,  அந்த வகையில் தற்போது டிடிவி தினகரன் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணையும் என அதிரடி கிளப்பியுள்ளது ஆதினம். 

 

மதுரை ஆதீனம் கூறுகையில், " டிடிவி தினகரன் நல்ல திறமைசாலி அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி, அவரது வெற்றி இறைவன் கையில் தான் உள்ளது. மக்கள் அனைவரும் அதிமுக, பாஜக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிமுக தன்னை முறையாக அழைத்தால் பிரச்சாரம் செய்யவும் தான் தயார். சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பின் ஆட்சி மாற்றம் வராது, தொடர்ந்து அதிமுக தான் ஆட்சியில் நீடிக்கும், பொள்ளாச்சி சம்பவத்திற்கும் தேர்தலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. " என்று தனக்கே உரிய பாணியில் கூறினார்.

 

eps

 

"எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சிக்கு துதிபாடி புகழ்வதே மதுரை ஆதீனத்தின் வேலை.  மற்ற ஆதீனங்கள் அரசியலைப்பற்றி வெளிப்படையாகப் பேச மாட்டார்கள். ஆனால் மதுரை ஆதினமோ சற்று அதிலிருந்து வேறுபட்டு அரசியல் மற்றும் சமூகம், என சகலத்தையும் கலந்துப் பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையான ஒன்றுதான்.  திமுக ஆட்சியின் போது கலைஞரை புகழ்ந்து தள்ளி ஜெயலலிதாவிடம் வாங்கிக்கட்டிக் கொண்ட கதைகளும் உண்டு. சபள சாமியார் நித்தியானந்தாவிடம், எதற்கோ சிக்கி சின்னாபின்னமாகிய கதைகளும் அவருக்கு உண்டு. 

 

தற்போது எடப்பாடி பழனிச்சாமியும், டிடிவி.தினகரனும் ஒன்று சேர்வார்கள் என்று புகழ்ந்து தள்ளியதோடு, பொள்ளாச்சி பாலியல் வண்கொடுமை விவகாரம், தேர்தலில் ஒன்றும் செய்யாது என பெண்ணியத்தை கொச்சைப்படுத்துவது போல் பேசியிருப்பதும், இதுவரை ஏந்த ஆதீனமும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக வாக்குகேட்டு வீதிக்கு வருகிறேன் என்று  இதுவரை யாரும் கூறியதில்லை.  ஆனால் மதுரை ஆதீனம் அதையும் செய்கிறேன் என்றுக்கூறுவது வேதனையளிக்கிறது. அவர் சார்ந்துள்ள ஆன்மீகப் பணியில் அவர் இதுவரை எந்த சாதனைகளையும் நிகழ்த்தியதில்லை, குறிப்பாக அவரது கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோயில் சிதிலமடைந்து பொதுமக்கள் வந்து செல்வதற்கும், வணங்குவதற்கும் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. அந்த காலத்தில் முன்னோர்கள் தேர் ஓட்டினார்கள். ஆனால் இன்று அந்த தேர் நொறுங்கி புதராக மண்டிக் கிடக்கிறது. குளங்கள் புதர்மண்டிக்கிடக்கிறது.  இப்படி அவரது நிர்வாகத்தில் இருக்கும் குளறுபடிகளை செய்ய முடியாத அவர், ஆன்மிகப் பணியை விட்டு,  அரசியலில் வீதிக்கு,வீதி வந்து தேர்தலில் வாக்கு கேட்கிறேன். என்று கூறுவது வேதனையாக இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது என்கிறார்கள் திருப்புறம்பியம், கஞ்சனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் பக்தர்களும்.

 

ttv

 

மதுரை ஆதீனத்தின்  இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் டிடிவி தினகரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக தினகரனுடன் சமரசப் பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல.. அதற்கு அவசியமும் இல்லை! என கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தல் பறக்கும் படை கலைப்பு; எல்லையில் மட்டும் கண்காணிப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Dissolution of Election Flying Corps; Surveillance only at the border

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும்,  24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது. இது தவிர வீடியோ கண்காணிப்புக் குழு, நிலை கண்காணிப்புக் குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன.

ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைத்து உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி , பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது. கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் மூன்று பறக்கும் படையினர் மற்றும் எல்லை பகுதியில் சோதனை, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.