Skip to main content

மாவட்ட செயலாளருக்கு எதிராக அணி திரட்டி முதல்வரிடம் புகார் கொடுக்கும் அமைச்சர்

Published on 14/03/2019 | Edited on 14/03/2019

 

திருச்சி மாநகரில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும், எம்.பியும் மா.செ.வுமான குமாருக்கும் இடையே நடக்கும் கோஷ்டி பிரச்சனை எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் மா.செ.வுக்கு எதிராக புகார் கொடுக்க அமைச்சர் ஆட்களை தயார்படுத்தி முதல்வர் வீட்டுக்கு அனுப்பி வைத்திருப்பது தான் தற்போதைய பரபரப்பான செய்தி.

 

v

 

திருச்சி மாநகரில் உள்ள சிந்தாமணி மற்றும் அமராவதி கூட்டுறவு சங்கத்திற்கு புதிய தலைவர்களாக திருச்சி மாநகர் அதிமுக மா.செ. குமாரின் தீவிர ஆதரவாளர்களாக ஏர்போர்ட் விஜி, சகாதேவ் பாண்டியன் ஆகியோரை நியமித்தார்கள். 

 

இந்த கூட்டுறவு சங்கத்தின் புதிய நியமனத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் இரண்டு பேருக்கும் அதிர்ச்சியடைந்து விட்டார்களாம்.

 

இந்த கூட்டுறவு சங்க பொறுப்பாளர்களுக்கு தங்களுடைய ஆட்கள் யாருக்கும் கிடைக்க வில்லை என்பதால் திருச்சி மாநகரத்தை சேர்ந்த பகுதி செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி, வெல்லமண்டி சண்முகம் உள்ளிட்ட 3 பேர், வட்ட செயலாளர்கள் 6 பேர் என்று 22 பேர் தயார் செய்து இரவோடு இரவாக சென்னைக்கு முதல்வர் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்து புகார் கொடுக்க ஏற்பாடு செய்து ஒரு வேனில் அனுப்பியிருக்காங்களாம்.

 

ஏற்கனவே இந்த அமைச்சர் வெல்லமண்டி தன்னிடம் இருந்து சென்ற மாவட்ட செயலாளர் பொறுப்பை திரும்ப வாங்கி விட வேண்டும் ஏற்கனவே பல முறை முறையீட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் இந்த தேர்தல் நேரத்தில் எதிர்ப்பை காட்டி பதவியை பறிக்க வேண்டும். இதை விட்டால் வேறு வழியில்லை முழு முயற்சியோடு சென்று கொண்டிருக்கிறார்கள். 

 

அதே நேரத்தில் ஏற்கனவே குமார் மா.செ.வாக பொறுப்பற்றவுடன் கட்சியில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்பு பட்டியல் தயார் செய்து தலைமைக்கு அனுப்பி வைத்தனர். இதை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கோஷ்டி சண்டையில் அந்த பட்டியல் நிறுத்தி வைத்தனர். தற்போது வரை கட்சியில் உள்ளவர்கள் பதவி இல்லாமல் தவிக்கிறார்கள். 

அதே நேரம் அமைச்சர்கள் - மா.செ. கோஷ்டி பிரச்சனையில் திருச்சிக்கு கிடைக்க வேண்டிய எம்.பி. தொகுதி கூட்டணி கட்சிக்கு சென்றுவிட்டது. 

 

எம்.பி. தேர்தலில் வேட்பாளர்கள் யார்? என நேர்காணல் விறுவிறுப்பாக தேர்தல் ஆயத்தப்பணிகள் தலைமையில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படி கோஷ்டி பிரச்சனை அதிகரித்து ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி  கவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது தொண்டர்கள் இடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

 

இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தேமுதிகவின் நிலை தான் பரிதாபமாக இருக்கிறது என்கிறார்கள் கட்சியில் உள்ள சீனியர்கள்.


 

சார்ந்த செய்திகள்