Skip to main content

இந்தி திணிப்பை தடுக்க எந்த தியாகத்திற்கும் தயார்- ஸ்டாலின் பேச்சு! 

Published on 15/09/2019 | Edited on 15/09/2019

திருவண்ணாமலையில் நடைபெற்றுவரும் திமுகவின் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில், 

 

stalin speech

 

திமுக முப்பெரும் விழாவில் பேனர் வைக்காததற்கு நன்றி. இனிமேலும் யாரும் பேனர் வைக்க வேண்டாம்.  விளம்பரத்திற்காக அல்ல மக்களின் வெறுப்புக்கும் உள்ளாகும் வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன.    கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டும் என்ற அவர்,

திராவிட படைப்பாளிகளுக்கு 2020 ஜூன் மூன்றாம் தேதி கலை இலக்கிய விருதுகள் வழங்கப்படும். வெற்றி-தோல்வியை ஒன்றாக கருதி நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பது திமுகதான் என்றார்.

இந்தி திணிப்பை தடுக்க எந்த தியாகத்திற்கும் திமுக தயாராக இருக்கிறது. இந்தி குறித்து மோடி, அமித்ஷாவின் கருத்து இந்தி பேசாத மக்கள் மனதில் தேள் கொட்டியதுபோல் உள்ளது. மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தாய்மொழி இந்தி அல்ல பிறகு எதற்காக இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள் எனவும் கேள்வி எழுப்பி பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்