Skip to main content

முதல்வரை மாற்றவே வெளியேறினோம்;இணைந்தால் நல்லதுதான்-தங்கதமிழ் செல்வன்!!

Published on 09/12/2018 | Edited on 09/12/2018

 

ammk

 

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசுகையில்,

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இன்று பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிமுகவும், திமுகவும் ஏற்றுக்கொள்ளவேண்டும். பாஜகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாஜகவிற்கு இது கொஞ்சம் புரிந்துள்ளது. இப்பொழுது இருக்கின்ற அதிமுகவை நம்பி நின்றால் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்பதே பாஜகவினுடைய கருத்தாக தெரிகிறது. சமீபகாலமாக ஊடகங்கள், பத்திரிகைகள், அரசியல் விமர்சகர்கள் பேசுகின்ற பேச்சுகளை வைத்து பார்க்கும்போது நன்கு தெரிகிறது.

 

 

காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருப்பதை போல் தெரிகிறது. ஆகையால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுடன் இணையவேண்டும் என்பதை போன்ற ஒரு பேச்சு உலா வருவதாக நான் அறிகிறேன். நல்ல சூழல் தான் ஆனால் எங்களுடைய கோரிக்கை என்னவென்றால் நாங்கள் இந்த 18 எம்எல்ஏக்களும் அதிமுகவை அழிக்க வேண்டும், இரட்டை இலையை அழிக்க வேண்டும் நாங்கள் வெளியே வரவில்லை.

 

 

எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இருக்க வேண்டும். அதே போல அவர் உருவாக்கிய இரட்டை இலையும் இருக்க வேண்டும். அந்த அதிமுகவையும், இரட்டை இலையும் பாதுகாத்து வளர்த்த அம்மா அவர்களுடைய புகழும் இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

 

 

நாங்கள் வெளியே போனதன் நோக்கமே இப்பொழுது இருக்கிற முதலமைச்சரை மாற்றிவிட்டு புதிய முதலமைச்சரை வைத்து அம்மாவுடைய ஆட்சியை கொண்டு வரவேண்டும் என நினைத்தோம். ஆனால்  எம்எல்ஏவை நீங்கள் பதவி நீக்கம் செய்தீர்கள் இப்பொழுது மீண்டும் உணர்ந்து வந்துளீர்கள். நல்ல செய்திதான் இணைந்தால் நல்லதுதான் எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்