
வழக்கறிஞர் ஜி.மனோகரன் எழுதிய ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ நூல் வெளியீட்டு விழா சென்னை பிரஸ் கிளப்பில் இன்று(17.11.2018) மாலை நடைபெற்றது. மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் நூலை வெளியிட, நக்கீரன் ஆசிரியர் நூலை பெற்றுக்கொண்டார்.

தா.பாண்டியன், நக்கீரன் ஆசிரியர் சிறப்புரை ஆற்றினார்கள். மூத்த வழக்கறிஞர் பா.பா.மோகன் வாழ்த்துரை வழங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மூ.வீராபாண்டியன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் துணை தலைவர் சுதா ராமகிருஷ்ணன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். மூத்த வழக்கறிஞர் கே.தேசிங், வரவேற்புரை ஆற்றினார். கலை இலக்கிய பெருமன்றத்தின் மோ.ஜேம்ஸ் தலைமை வகித்தார்.

கவிஞர் சங்கைவேலவன், புலவர் சங்கரபாண்டியன், ஓவியகவி வீரமணி, அம்பத்தூர் முருகேசன், நாட்டுப்புற கவிஞர் கி.சு.குமார் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
வழக்கறிஞர் ஆர்.ரவிசேகரன், பி.அசோகன், அல்போன்ஸ்ராஜா, வசந்தகுமார், முனைவர் சசிகலா, முனைவர் கணபதி இளங்கோ, ஏ.ஆர்.ராதாகிருஷ்ணன், மா.ஜோ.டில்லி, மேன்மை மணி, ஆவடி மதிவாணன், ஆசிரியர் முருகன், வேட்டவலம் ஆறுமுகம் ஆகியோர் விழாவில் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஜி.மனோகரன் ஏற்புரை ஆற்றினார். தோழர் மு.சம்பத் நன்றியுரை ஆற்றினார்.
