Skip to main content

தற்கொலை தாக்குதல்கள் தொடருமா? அதிர்ச்சியில் தமிழகம்!!

Published on 15/06/2019 | Edited on 15/06/2019

கோவையில் கடந்த 12ம் தேதி  7 இடங்களில் சோதனை நடத்தி ஆறு பேரிடம் விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பினர் அசாருதீன், ஷேக் இதயதுல்லா என்ற  இருவரை கைது செய்தனர். மேலும் 7 பேரிடம் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி கோவை மாநகர காவல்துறையினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் முகமது உசேன், ஷாஜகான், சபியுல்லா ஆகிய மூன்றுபேரை பிடித்து இரண்டு தினங்களாக விசாரணை மேற்கொண்டனர்.

 

KOVAI



அப்போது விசாரணையில் தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதயகுமார் கொடுத்த தனி அறிக்கையின் அடிப்படையில், கைது  மூவர் மீதும் UAPA ( சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்  கீழ் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். மூன்று பேரிடம் இரு தினங்களாக விசாரணை நடத்த பின் இன்று காலை கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டதனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.

 


இதனிடையே காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் தடை செய்யப்பட்ட இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும், அந்த அமைப்பின் வீடியோ காட்சிகளை பலருக்கு பகிர்ந்து கொள்வதாகவும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளை தமிழில் மொழியாக்கம் செய்து பரப்பி வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.



மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்தி வரும் ஜிகாத் காட்சிகளின் வீடியோ காட்சிகளையும்  பகிர்ந்து வருவதாகவும் தெரிகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர். கோவை மாநகரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவான தங்கள்  பலத்தை காட்டவும்,  பாடம் புகட்டவும் இவர்கள் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது எனவும், கோவில்கள், தேவாலயங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் தெரியவருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கோவையில் ஜிகாதி சித்தாந்தங்கள், கொள்கைகள், நம்பிக்கைகளுக்கு எதிரான நபர்களையும், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களை கவனித்து அறிக்கை கொடுத்து வரும் நுண்ணறிவு பிரிவுகளில் உள்ள காவல்துறையினரை கொன்று மக்கள் மனதில் பயத்தையும் பீதியையும் உருவாக்கவும்  முடிவு செய்திருக்கிறார்கள் என தெரியவருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து செல்போன், பென்டிரைவ், லேப்டாப் போன்றவைகளும்,  இஸ்லாமிய மார்க்கம் குறித்த புத்தகங்களும், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களும், வங்கி பாஸ் புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடரும் சோகம்; வெள்ளியங்கிரி மலையேறுவோர் கவனத்திற்கு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Ongoing Tragedy; Attention Velliangiri Mountaineers

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், தொடர்ந்து சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளியங்கிரி  மலை  மீது ஏற முயன்ற மூன்று பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (68) வயது. மருத்துவரான இவர் நேற்று நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். இன்று காலை நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இந்த மூன்று பேரின் சடலங்களையும் கீழே கொண்டு வரும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் 3 பேர் இதற்கு முன்னதாகவே இரண்டு பேர் என மொத்தம் 5 பேர் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது உயிரிழந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதயக் கோளாறு, மூச்சுத்திணறல் பாதிப்பு, சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.