Skip to main content

மிகுந்த மகிழ்ச்சியில் சௌந்தர்யா ரஜினிகாந்த்! தொடங்கியது ‘புதுவெள்ளம் - பொன்னியின் செல்வன்’!

Published on 10/09/2021 | Edited on 10/09/2021

 

 

PUTHU VELLAM - PONNIYIN SELVAN SEASON 1 web serious

 

பொன்னியின் செல்வன்... எழுத்தாளர், பத்திரிகையாளர் கல்கி எழுதிய இந்தப் புதினம் தமிழின் மிக மிக பிரபலமான, காலங்கள் கடந்து நிற்கும் படைப்பாகத் திகழ்கிறது. இந்த கிண்டில் காலத்திலும் ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் புத்தக வடிவங்கள் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கின்றன. தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர், கமல் தொடங்கி பலருக்கும் இக்கதையை படமாக்கும் கனவு இருந்தது. இதற்கான முயற்சிகள் அவ்வப்போது தொடங்கப்பட்டு தொடராமல் போயின. இந்தக் கதையின் பிரம்மாண்டத்தை திரையில் கொண்டு வருவதும், முழு கதையையும் சுவாரசியம் குறையாமல் மூன்று மணி நேரத்துக்குள் சுருக்குவதும் பெரும் சவாலாகும். இந்த சவாலை எடுத்து மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து ஜெயமோகன் எழுத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இரண்டு பகுதிகளாக உருவாக்கி வருகிறார். இந்நிலையில் இந்தக் கதையை வெப்சிரீஸாக உருவாக்கும் முயற்சியில் இறங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

 

sarathkumar jothi

சரத்குமார் ஜோதி

 

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் கதையை வெப் சிரீஸாக, பிரபல இயக்குனர் ஷங்கரிடம் பணியாற்றிய சரத்குமார் ஜோதி இயக்குகிறார். இந்த வெப் சிரீஸின் பெயர் 'புதுவெள்ளம் பொன்னியின் செல்வன் சீசன் 1'. ”பல்வேறு தடைகளுக்குப் பிறகு ஸ்கிரிப்ட் தொடர்பான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது” என்று குறிப்பிட்டு இது தொடர்பான புகைப்படங்களை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உப்பு புளி காரம்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
hotstar new series uppu puli kaaran  first look released

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், அடுத்து வழங்கும் புதிய சீரிஸ், 'உப்பு புளி காரம்'. இதில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், இந்த சீரிஸ் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ளது. இயக்குநர் எம் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் என்பவர் இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில் இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இந்த சீரிஸ் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் சமீபத்திய வெளியீடுகளான ஹார்ட் பீட், மத்தகம் மற்றும் லேபிள் சீரிஸ்கள், வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில் 4 புதிய எபிசோடுகள்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
hot bread web series update

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், அதன் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸை மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் துவங்கியது. இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

'ஏ டெலி பேக்டரி' நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது. இந்த சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களைச் சுற்றி நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான் ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில், நான்கு எபிஸோடுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரிஸில், கடந்த வார இறுதி எபிஸோடில் ரீனா, மருத்துவர் ரதியின் மகள் எனும் டிவிஸ்ட் தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் ரதி என்னும் மருத்துவருக்கு கீழ், புதிதாக வேலைக்குச் சேரும் ரீனா, தான்தான் மருத்துவர் ரதியின் மகள் எனும் உண்மையை உடைக்கிறாள்.

இந்த சூழ்நிலையில் ரீனாவின் கேள்விக்கு ரதியின் பதில் என்ன? ஏன் ரீனாவை பிறந்தவுடன் தன்னுடன் வளர்க்காமல் குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் சென்றாள்? ரீனாவை மகளாக ஏற்றுக்கொண்டு தன் குடும்பத்தில் இணைத்துக் கொள்வாரா?. இத்தனை கேள்விகளுக்கு அடுத்தடுத்த எபிஸோடுகளில் பதில் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.