Skip to main content

ஷேர் ஆட்டோவில் ஓட்டுநர் சீட்டில் பயணித்த 2 ஆம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு...ஓட்டுனரின் அலட்சியத்தால் நிகழ்ந்த சோகம்!

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஷேர் ஆட்டோவில் முன்பக்கம் ஓட்டுநர் சீட்டில் பயணம் செய்த 2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 2-year-old girl in driver's seat in Share Auto accident Incident in vellore


வேலூர் மாவட்டம் ஆம்பூரில் மல்லிகை தோப்பு பகுதியை சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் திவ்யாகரசி. இவர் நாகேஸ்வரம் அருகிலுள்ள இந்து ஆரம்ப பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சிறுமி திவ்யகரசியும் அவரது சகதோரனுமான லோகேஸ்வரனும் கார்த்திக் என்பவரின் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை சுமார் 15 குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்ட கார்த்திக் இடம் பத்தவில்லை என திவ்யகரசியை ஓட்டுநர் இருக்கையில் அழைத்து சென்றுள்ளார்.

 

 2-year-old girl in driver's seat in Share Auto accident Incident in vellore


பள்ளி செல்லும் வழியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிற நிலையில் அந்த பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளங்களில் ஏறி இறங்கி சென்றிருக்கிறது. அப்படி செல்லும்பொழுது ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டாம் வகுப்பு சிறுமி திவ்யகரசி ஆட்டோவிலிருந்து கீழேவிழ படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திவ்யகரசி இறுதியில் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 2-year-old girl in driver's seat in Share Auto accident Incident in vellore


மருத்துவமனையில் இறந்துபோன சிறுமி திவ்யாவின் சடலத்தை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்திய. விதிமுறைகளை மீறி அதிக அளவில் நபர்களை ஆட்டோவில் திணித்து செல்வது குற்றம். இந்த விதிமீறல் செயலில் ஈடுபட்டு சிறுமி உயிரிழந்திருக்கும் நிலையில் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்